Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிகிச்சைத் தொகுதி வளாகத்தில் நோயாளர் காத்திருப்பு பகுதி ஒன்றை நிர்மாணித்துள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருகை தருவோருக்கும், அவர்களுடன் சமூகமளிக்கும் குடும்பத்தாருக்கும் சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த நிர்மாணம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த காத்திருப்பு பகுதியின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் இடம்பெற்றதுடன், இதில் றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.ஜே. ஞானம், றைனோ நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ மற்றும் ஊழிய அங்கத்தவர்கள், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளர். வைத்தியர். (திருமதி) ஹிமாலி விஜேகுணசேகர மற்றும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
100 நோயாளர்கள் வரை காத்திருக்கக்கூடிய வகையில் 1400 சதுர அடிப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த காத்திருப்பு அறையில் பொது அறிவித்தல் கட்டமைப்பு மற்றும் மின்விசிறிகள் போன்றன பொருத்தப்பட்டுள்ளன. றைனோ முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.ஜே.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “றைனோவைச் சேர்ந்த எம் அனைவருக்கும் இது மிகவும் விசேடமான தருணமாகும், ஏனெனில் இந்தத் திட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளமையானது, எனது மறைந்த தந்தை. தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் 100ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. 1978 ஆம் ஆண்டில் றைனோ நிறுவனத்தின் தவிசாளர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராக இவர் பொறுப்பேற்றதுடன், 1962 ஆம் ஆண்டில் குழுமமாக எமது பயணத்தை ஆரம்பித்து 60 வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. றைனோ ரூஃபிங்கைச் சேர்ந்த நாம் தொடர்ந்தும் எமது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதுடன், சிறந்த தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி அவர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சுவதற்கு எதிர்பார்க்கின்றோம். எமது பணியின் சிறந்த உதாரணமாக இந்த காத்திருப்புப் பகுதி அமைந்திருப்பதுடன், இலங்கையில் கூரைகள் மற்றும் சீலிங் தயாரிப்புகள் தொடர்ச்சியாக விநியோகிப்பதில் சந்தை முன்னோடியாக திகழ்வதற்கான எமது உறுதி மொழியாகவும் அமைந்துள்ளது. இந்த காத்திருப்புப் பகுதியின் நிர்மாணத்துடன், வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் தினசரி சுயநோக்கமற்ற பங்களிப்புக்காக நன்றி தெரிவிப்பதுடன், சமூகத்துக்கு மீள வழங்குவது எனும் தகவலின் பிரகாரம் இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்வதில் பங்காற்றியிருந்த எனது அணியைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் (திருமதி) ஹிமாலி விஜேகுணசேகர கருத்துத் தெரிவிக்கையில், “இந்த காத்திருப்பு பகுதியின் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்காக றைனோ ரூஃபிங் போன்றதொரு பாரிய நிறுவனம் முன்வந்து செயலாற்றியிருந்தமையை காண்பதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றோம். நாளாந்த அடிப்படையில் வைத்தியசாலைக்கு விஜயம் செய்யும், வெளியேறும் நோயாளர்களுக்கு இந்தத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையினூடாக பெருமளவு பயன் கிடைக்கும் என வைத்தியசாலையைச் சேர்ந்த நாம் கருதுகின்றோம். அத்துடன், நோயாளர்களினதும், அவர்களின் அன்புக்குரியவர்களினதும் சௌகரியத்தை உறுதி செய்வதற்கான ஒரு திட்டமாகவும் இது அமைந்துள்ளது.” என்றார்.
39 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
48 minute ago
59 minute ago