2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

வடமேல் மாகாணத்தில் நீர் சுத்திகரிப்பு முயற்சிகளுக்கு பங்களிப்பு

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மோட்டார் வாகனப் புகை வெளியீட்டு சோதனையில் முன்னோடியான LAUGFS Eco Sri சமூகத்துக்குப் பிரதியுபகாரம் செய்யும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் நீர்ச் சுத்திகரிப்பு முயற்சிகளுக்கு பங்களிப்பை வழங்கியுள்ளது. தனது பரோபகார முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணம் புத்தாண்டை LAUGFS Eco Sri அணி ஆரம்பித்துள்ளதுடன், வட மேல் மாகாணத்தில் கெப்பித்திகொல்லாவ என்ற இடத்திலுள்ள கொணுஹத்தெனவ வித்தியாலயத்தின் மாணவர்களின் பயன் கருதி நீர் சுத்திகரிப்புத் தொகுதி யொன்றை வழங்கியுள்ளது.  

ஒரு மில்லியன் ரூபாய் தொகைக்கு மேற்பட்ட முதலீட்டுடன் நீர் சுத்திகரிப்புத் தொகுதியை வழங்கியுள்ளமைக்குப் புறம்பாக, கொணுஹத்தெனவ மகா வித்தியாலயத்தில் உதவிகளை எதிர்பார்த்திருந்த 235 மாணவர்களுக்கு புதிய பாடசாலை ஆண்டுக்காக அத்தியாவசியமான புத்தகப்பைகள்,  காகிதாதிப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.  

“பல்வேறுபட்ட எமது சமூக மேம்பாட்டுச் செயற்றிட்டங்களினூடாக சமூகத்துக்கு பிரதியுபகாரம் செய்வதில் LAUGFS Eco Sri அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. உயர் மட்டங்களில் அசுத்தங்களைக் கொண்டுள்ள சுத்திகரிக்கப்படாத குடிநீரை அருந்துவதால் அப்பிரதேசத்தில் சிறுநீரக வியாதி நிலவி வருகின்றது. ஆகவே, கொணுஹத்தெனவ வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய்வாய்ப்படும் ஆபத்தைக் குறைத்து, அவர்களுடைய ஒட்டுமொத்த நலனுக்கு பங்களிப்பதற்கு உதவும் நம்பிக்கையுடன் அவர்களுக்கு நீர் சுத்திகரிப்புத் தொகுதியொன்றை வழங்க விரும்பினோம். பாடசாலையில் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட, பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப்பெறுகின்றது என்ற மன நிம்மதியை இம்முன்னெடுப்பானது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் வழங்கும் என நாம் நம்புகின்றோம்” என்று LAUGFS Eco Sri இன் தொழிற்பாடுகளுக்கான பிரதிப் பொது முகாமையாளரான சாலிய திசாநாயக்க குறிப்பிட்டார்.  

ஐக்கிய நாடுகள் நிலைபேற்று அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் பல்வேறு சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை LAUGFS Eco Sri முன்னெடுத்து வருகின்றது. அனைவருக்கும் சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற நிலைபேற்று அபிவிருத்தி இலக்கு இலக்கம் ஆறுடன் இச்செயல்திட்டம் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளதுடன், நிறுவனத்தின் முயற்சிகளால் திரட்டப்பட்ட நிதி மற்றும் நாடளாவியரீதியிலுள்ள வாகனப் புகை வெளியீட்டு சோதனை மையங்களைக் கொண்ட வலையமைப்பினூடாக பொருட்களின் விற்பனை மூலமாகத் திரப்பட்ட நிதி ஆகிய வற்றின் மூலமாக இதற்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X