Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து காப்புறுதிப் பணம் செலுத்தல், கோரிக்கைகளை நிறைவேற்றல் போன்றவற்றுக்குப் பல்வேறான தெரிவுகளை வழங்குகிறது
கொவிட்-19 பரவலிலிருந்து செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் காப்புறுதிக் கொள்கைகளைக் கொண்டிருப்போரும் அவர்களது குடும்பத்தினரும் சமுதாயமும் பாதுகாப்பாக, வீடுகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, பல்வேறான வழிமுறைகளை அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. பல இணையவழிக் கொடுப்பனவு வசதிகள், தொடர்பாடல் வழிகள் ஆகியவற்றோடு, காப்புறுதிக் கோரல் தொகைகளைச் செலுத்துதலுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, காப்புறுதிகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.
இலங்கையின் ஆயுள் காப்புறுதியின் முன்னோடிகளான செலிங்கோ லைஃப், இணையம் மூலமாகவும் அலைபேசி மூலமாகவும் செயலி (அப்) மூலமாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலமாக, இந்த ஊரடங்கு, சுய தனிமைப்படுத்தல் காலத்தில் காப்புறுதிக் கொள்கைகள் செயலிழந்து போவதைத் தடுத்துக்கொள்ள முடியும். இவற்றுக்கு மேலதிகமாக, நிறுவனத்தின் தொடர்பாடல் நிலையம், சமூக ஊடகத் தளங்கள் ஆகியனவற்றின் மூலமாக வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் துஷார ரணசிங்க,
“வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சமமான அளவில் மிகவும் சவாலான காலமாக இது அமைந்துள்ளது. எனவே, இந்நெருக்கடியிலிருந்து நாம் இணைந்து தப்பித்துக்கொள்வதற்கு, அனைத்துப் பங்குதாரர்களினதும் நலன்களும் குறைந்தளவு தடங்கல்களுடன் பாதுகாக்கப்படுவதற்கு, தொழில்நுபத்தால் வழங்கப்பட்டுள்ள சாத்தியப்பாடுகளை அதிகரித்துக்கொள்வதே வழியாகும். நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலமாக எங்களது காப்புறுதிக் கொள்கைகளைக் கொண்டோர் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து, தமது காப்புறுதிக் கொள்கைகள் செயலிழந்து போகாது என்ற நம்பிக்கையுடன் இருப்பது உறுதிசெய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு முறைகளில், அந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள 'இலகு கொடுப்பனவு' முறை உள்ளடங்குகிறது. இம்முறையானது இலகுவாக அணுகப்பட்டுச் செயற்படுத்தப்பட முடியும். காப்புறுதிக் கொள்கைகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு, கொள்கையின் இலக்கம் மாத்திரமே தேவையானதாகும்.
செலிங்கோ லைஃப் நிறுவனம், 'கொடுப்பனவு' வசதியை குறுஞ்செய்தி மூலமாக வழங்குகிறது. இதன்போது, வாடிக்கையாளர்களின் கொள்கை விவரங்களையும் கடனட்டை அல்லது டெபிட் அட்டை விவரங்களைப் பாதுகாப்பாக இணையத்தளத்தில் வழங்குவதற்கான சுட்டி (லிங்) ஒன்று அனுப்பப்படும்.
மேலதிகமாக, இலங்கையின் அநேகமான முன்னணி வங்கிகள், அதேபோல் குசiஆiஇ நணு ஊயளாஇ அஊயளாஇ புநnநை போன்ற அலைபேசிக் கொடுப்பனவுச் சேவைகள் ஆகியவற்றுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்த செலிங்கோ லைஃப், இதன்மூலமாக, காப்புறுதிக் கொள்கைகளுக்கான கொடுப்பனவுகளை எங்கும் எந்நேரத்திலும் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள் அல்லது தகவல்களை அறிய விரும்பும் ஏனையோர், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 'Ceylena' என்ற உரையாடல் கருவியை www.ceylincolife.com என்ற இணையத்தளத்தில் 24 மணிநேரமும் அணுக முடியும். ஆயுள் காப்புறுதி தொடர்பான கேள்விகளுக்கு இதன்மூலமாகப் பதில்பெற முடியும்.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் இணையக் கொடுப்பனவு முறை தொடர்பாகக் காணப்படும் எந்தக் கேள்விகளுக்கும் 0112461461 என்ற துரித இலக்கம் மூலமாகவோ அல்லது 077 5776556 என்ற இலக்கத்திலுள்ள வட்ஸ்அப் அல்லது வைபர் கணக்குகள் மூலமாகவோ பதில்களை வழங்குவதற்கு அந்நிறுவனம் தயாராக உள்ளது.
காப்புறுதிக் கோரல் தொகைகளை முன்வைக்க விரும்புவோர், நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு தொடர்புகொண்ட பின்னர், தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வட்ஸ்அப் மூலமாக அனுப்புவதற்கான செயற்பாடு ஆரம்பிக்கப்படும். இதன் விளைவில் குறித்த கோரல் தொகையானது காப்புறுதிக் கொள்கையாளர்களின் கணக்குகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற SLIM-Nielsen மக்கள் விருதுகளில், தொடர்ச்சியாக 14ஆவது ஆண்டாகவும், 'ஆண்டுக்கான மக்களின் ஆயுள் காப்புறுதிச் சேவை வழங்குநர்' விருதை வென்ற செலிங்கோ லைஃப், இலங்கையின் மிகவும் பெறுமதியான ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான 'பிரான்ட் ஃபினான்ஸ்' நிறுவனத்தின் விருதை 2019ஆம் ஆண்டில் வென்றதோடு, இலங்கையின் வர்த்தகத்துக்கான சர்வதேச சம்மேளனமானத்தால் இவ்வாண்டில் அதிகம் வியக்கப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் தெரிவானது. அத்தோடு, இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான வேள்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விருதை, தொடர்ச்சியான 6ஆவது ஆண்டாகவும் 2019ஆம் ஆண்டு செலிங்கோ லைஃப் வென்றதோடு, நாட்டின் முதல் 30 நிறுவனங்கள் என்ற பிஸ்னஸ் டுடேயின் தரப்படுத்தலில் ஒட்டுமொத்தத் தரப்படுத்தலில் 6ஆவது இடத்திலும் உள்ளது.
செயற்படுநிலையிலுள்ள காப்புறுதி ஒப்பந்தங்கள் மூலமாக, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாழ்க்கைகளைக் காப்புறுதி செய்துள்ள செலிங்கோ லைஃப் நிறுவனம், புத்தாக்கம், உற்பத்தி ஆராய்ச்சியும் அபிவிருத்தியும், வாடிக்கையாளர் சேவை, தொழில்வாண்மை அபிவிருத்தி, கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில், உள்நாட்டின் காப்புறுதித் துறையின் உயர்நிலை அளவுகோலாகக் கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago