Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சூழல் மற்றும் சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்துள்ள முன்னணி உணவு உற்பத்தியாளரான Ma’s ஃபூட்ஸ் புரோசசிங் (பிரைவட்) லிமிடெட் நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளாக அதன் உற்பத்திகளை சேதன விவசாயம் மற்றும் உற்பத்தி கொள்கைகளை நோக்கி முன்னோக்கி நகர்த்தி வருகிறது. முற்றிலும் குடும்பத்துக்கு சொந்தமான இந் நிறுவனம் அதன் ஊழியர்கள், சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
Ma’sஇன் உணவு உற்பத்தியில் பிரதான பங்கினை சிறியளவிலான விவசாயிகள் வகிக்கின்றனர். இந் நிறுவனம் உள்நாட்டுச் சமூகத்தினுள் சிறியளவிலான விவசாயிகளுக்கு கொள்வனவு முன்னுரிமை வழங்குவதனூடாக உள்நாட்டு சமூகத்திற்கு நிலையான வர்த்தகத்தை வழங்கி வருகிறது. சிறியளவிலான விவசாயிகளுக்கு 'Fair Trade' மற்றும் 'Organic' போன்ற சர்வதேச தரச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டும் வகையில் நிலையான விவசாய பண்ணைகள் என்டர்பிரைசஸ் நெட்வொர்க் (SAFENET) உருவாக்கத்தை ஆய'ள முன்னெடுத்து வருகிறது. இந்த சர்வதேசச் சான்றிதழ்களுக்கான மொத்த செலவுகளையும் Ma’s ஏற்று வருவதுடன், இந்த முயற்சியின் ஊடாக விவசாயிகள் தமது உற்பத்திகளை உயர் விலைக்கு விற்பதற்கும், வருடம் முழுவதும் நியாயமான விலையை பெற்றுக்கொள்வதும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் Ma’s நிறுவனம் விரிவான தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காப்பீட்டினை வழங்கி அதன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் மீது முதலீடு செய்து வருகிறது. நிறுவனமொன்று அதன் விவசாயிகள் மற்றும் ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டமொன்றை அளிப்பது இதுவே முதல் முறையாகும்.
பாடசாலை செல்லும் விவசாயிகளின் குழந்தைகளின் எழுதுபொருள் தேவையை பூர்த்தி செய்து அவர்களின் கல்விக்கும், சமூக உள்கட்டுமானங்களுக்கும் பங்களிப்பு வழங்குவதுடன், விவசாய குழுக்களைக் கொண்ட உள்நாட்டு சமூகத்திற்கும் Ma’s ஆதரவு வழங்கி வருகிறது. இந் நிறுவனம் அருகிலுள்ள கல்வி நிறுவனங்களை மறுசீரமைத்து வருகிறது. Ma’s நிறுவனம் குறிப்பிட்ட ஒரு பாடசாலைக்கு நூலகம், சிறுவர் விளையாட்டு மைதானம், சிற்றுண்டிச்சாலை, செயற்பாட்டு அறை போன்றவற்றின் கட்டுமானத்திற்கும், நீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்குமான நிதி வசதிகளை வழங்கியுள்ளது.
விவசாயிகளின் 'Fair Trade' மற்றும் 'சேதன' நடைமுறைகள் தொடர்பான இணக்கத்தை உறுதி செய்யும் வகையில் அவர்களை வழக்கமாக சந்தித்துவரும் Ma’s இன் விரிவாக்க அதிகாரிகள் மூலம் SAFENET அங்கத்தவர்களுக்கு நிர்வாக ஆதரவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விவசாயி மூலமும் பதிவேடுகள் பேணப்பட்டு வருவதுடன், இணக்கத்தை அளவிடுதவதற்காக விரிவான அதிகாரிகள் மூலம் அவை பார்வையிடப்படுகின்றன.
இந் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கி கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு முயற்சியை பின்பற்றி வருகிறது. கணவன், மனைவி இருவருமே Ma’s நிறுவனத்தில் பணியாற்றும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தனியான குடியிருப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் நிறுவனத்தின் சிற்றுண்டிச்சாலை மூலம் அனைத்துவேளை உணவுகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக Ma’s அதன் ஊழியர்களின் குழந்தைகளுக்கு வருடாந்த அடிப்படையில் பாடசாலை புத்தகங்கள் மற்றும் தேவையானவற்றை வழங்கி அவர்களின் கல்வியில் முதலீடு செய்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும், குறைந்த ஆற்றல் கொண்ட நபர்களுக்கும் விசேட இடவசதிகளையும், வேலைவாய்ப்பையும் Ma’s வழங்கி வருகிறது.
'அனைவருக்கும் சமனான வேலைவாய்ப்பை வழங்கிவரும் Ma’s ஆனது அதன் ஆற்றல்மிகுந்த ஊழியர்களை அவர்களின் உடல் ரீதியான குறைபாடுகள் அடிப்படையில் நிராகரிப்புகளை மேற்கொள்வதில்லை. Sedex சான்றைப் பெற்ற நிறுவனம் எனும் ரீதியில், Ma’s ஆனது உலகளாவிய ஊழியர் தரநிலைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தக நெறிமுறை தரநிலைகளை கடைபிடித்து வருகிறது' ஆய'ள ஃபூட்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் முகாமையாளர் சாரா டி அல்விஸ் தெரிவித்தார்.
இலங்கையில் சேதன விவசாயம் மற்றும் 'Fair Trade' ஐ ஊக்குவித்து வருவதற்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்களின் மத்தியில் ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை ஊக்குவித்து வருவது மட்டுமன்றி, அதன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதிலும் Ma’s ஃபூட்ஸ் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago