2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தெற்கு புகையிரத பாதை நிர்மாண பணிகளுக்கு சீனா 272 மில்லியன் டொலர் உதவி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகளுக்கு சீனா 272 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித்தொகையாக வழங்கியுள்ளது. இதற்கமைவாக இலங்கையின் மிகவும் நீளமான புகையிரத குகையை கொண்டமைந்த புகையிரதப்பாதை தெற்கு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்றைய தினம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் சமல் ராஜபக்ஷ உரையாற்றுகையில் ”நாம் சீன அரசாங்கத்துக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த புகையிரத பாதை நிர்மாணத்தின் மூலம் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள துறைமுகம், சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை இணைக்க முடியும்” என்றார்.
 
இந்த திட்டம் 2016ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. 26.75 கிலோமீற்றர் தூரப்பகுதி இந்த உதவித்தொகையின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .