2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கடந்த ஆண்டில் இலங்கையின் விளம்பர துறையில் 64.7 பில்லியன் ரூபா செலவு

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் விளம்பரத்துறையில் கடந்த ஆண்டில் 64.7 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், இதில் பாரம்பரிய விளம்பர ஊடகங்களிலிருந்து மருவி நவீன விளம்பர ஊடகங்களில் தமது விளம்பரங்களை பிரசாரப்படுத்துவதற்கான செலவீனம் அதிகரித்து காணப்பட்டதாக முன்னணி விளம்பர நிறுவனத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

லியோ பேர்னட் விளம்பர நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவரும் இந்திய பிராந்தியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அர்விந்த் ஷர்மா இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டை பொறுத்தமட்டில் தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக 45.23 பில்லியன் ரூபாவும், அச்சு மற்றும் வானொலி விளம்பரங்களுக்காக 6.3 பில்லியன் மற்றும் 13.24 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆப்ளிகேஷன்கள், யுடியுப் - வைரல் வீடியோக்கள் மற்றும் இணையத்தளங்கள் போன்றன இந்த விளம்பரத்துறையில் மக்கள் மத்தியில் அணுகக்கூடிய சிறந்த ஊடகங்களாக மாற்றமடைந்து வருவதாகவும், இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளதென அரவிந்த் ஷர்மா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .