2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில். அமெ.டொ. கடன் எதிர்பார்ப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மற்றுமொரு புதிய கடன் கோரிக்கையை இலங்கை முன்வைத்துள்ளதென மத்திய வங்கியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ளும் வகையில்  மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கோரிக்கை இந்த வருடத்தின் நிறைவினுள் கிடைக்கக்கூடியதாகவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருவதாகவும், இதனை பொறுத்தே கடன் வழங்குவது குறித்த இறுதி தீர்மானத்தை சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் முன்னர் வழங்கப்பட்டிருந்த கடன் தொகையின் இறுதி தொகையை வழங்கும் முன்னர், நாட்டின் பொருளாதார நிலை சீரான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இந்த இறுதி கட்ட கடன் தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதத்தை இலங்கை மத்திய வங்கி 7.2 வீதத்திலிருந்து 6.5 வீதமாக குறைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .