2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பாசிக்குடாவில் 13ஆவது உள்ளாச ஹோட்டல்

Kogilavani   / 2013 ஜனவரி 22 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


பாசிக்குடாவில் 13ஆவது உள்ளாச ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

லாப் லெசர் (Lafe Leisure) நிருவனத்தினால் லாப் ரிசோட் (Lafe Resort) எனும் பெயரில் இவ் ஹோட்டல் அமைக்கப்படவுள்ளது.

இவ்ஹோட்டலின் நிர்மாண பணிகளுக்காக 1.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட அறைகள், குளிரூட்டப்படாத அறைகளுமாக மொத்தம் 110 அறைகள் அமைக்கப்படவுள்ளதுடன் நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக்கூடம் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இவ் ஹோட்டலின் நிர்மாணப் பணிகள் 18 மாதங்களில் பூர்த்தியாக்கப்படும் என்று நிர்வாகப் பணிப்பாளர் யூ.கே.திலக் டி சில்வா தெரிவித்தார்.

லாப் லெசர் நிருவனத்தின் தலைவர் டபள்யூ.கே.எச்.வேகபிட்டிய, நிர்வாகப் பணிப்பாளர் யூ.கே.திலக் டி சில்வா, பணிப்பாளர் ஸ்ரீலால் மித்திரபால, முகாமையாளர்களான அஜித் குமாரகே, பீட்டர் குணசேகர, வசந்த சில்வா ஆகியோரும் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .