2025 ஜூலை 17, வியாழக்கிழமை

10ஆவது யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிறைவு

Editorial   / 2019 ஜனவரி 29 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குக்கான நுழைவாயிலாக, யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, தொடர்ச்சியாக 10ஆவது வருடமாகவும் ஜனவரி 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது.   

தொழில் வழிகாட்டல் சேவைகள், விசேட உணவு வகைகள், குடிபானங்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், கட்டட நிர்மாண பொருட்கள், சாதனங்கள், அழகுச் சாதன, அழகுக்கலை சேவைகள், சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள், கல்வி ஆலோசனைகள், மருத்துவப் பரிசோதனைகள் என்பன இக்கண்காட்சியில் இடம்பெற்றன.  

பல்வேறு உற்பத்திகளை கொண்டிருந்த இந்நிகழ்வு, வட பகுதிக்கு தமது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க எதிர்பார்க்கின்ற நிறுவனங்களுக்கான நிகழ்வாக அமைந்திருந்ததுடன், இப்பிராந்தியத்திலுள்ள வர்த்தக நிறுவனங்கள், தமது நடவடிக்கைகளைப் பிராந்தியத்துக்கு வெளியே விஸ்தரிப்பதற்கும், இத்தொழிற்றுறையிலுள்ள பாரிய நிறுவனங்களுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் வழங்குவதாக அமைந்திருந்தது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X