CDBஇன் தலைவர் ஹர்சேல் குணவர்தன
சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமானது 2012/13 நிதியாண்டில் அனைத்து வணிக அம்சங்களிலும் நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என கொழும்பு பங்குச்சந்தை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட முடிவுகளில் தெளிவான குறிப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. LKAS/SLRFC உடனான இணைப்பின் மூலம் நடப்பு ஆண்டு புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, இலங்கை பட்டயக்கணக்காளர் நிலையத்தின் விதிப்படி SLAS அடிப்படையில் ஒப்பீட்டு புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐந்தொகையில் 48% வீத வளர்ச்சியையும், ஆவணப்படுத்தும் புள்ளியாக 24.49 பில்லியன்களையும் பதிவு செய்துள்ளது. 4.31 பில்லியன்களை பதிவு செய்து வளர்ச்சியில் 50% வீதத்தை வருமானமாக பிரதிபலித்திருந்தது. நிகர வட்டி வருவாயானது 36மூ வளர்ச்சியுடன் 1.70 பில்லியன்களை பதிவு செய்துள்ளது. சந்தை வட்டி விகிதங்களின் அதிகரிப்பின் காரணமாக எதிர்மறையான விளைவுகளாக வட்டி வருவாய் 60% வீத வளர்ச்சியை காட்டியுள்ள அதேவேளை வட்டி செலவுகள் 83% வீத அதிகரிப்பை காட்டியது. கடந்த ஆண்டின் 644.27 மில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு 669.99 மில்லியன்களை பதிவு செய்திருந்தது. கடந்த காலத்தில் இடம்பெற்ற வருமான வரி செலவுகளின் 9 மடங்கு அதிகரிப்பின் காரணமாக 630.43 மில்லியனுடன் ஒப்பிடுகையில் வரிக்கு பின்னரான இலாபமாக 534.87 மில்லியன் பதிவாகியிருந்தது. ஆண்டின் விரிவான மொத்த வருமானம் 761.32 மில்லியன் ஆகும்.
ஐந்தொகையின் வலுவான வளர்ச்சிக்கு, 47% கடன் புத்தக வளர்ச்சி மற்றும் வைப்பு அடிப்படையிலான 56% வீத வளர்ச்சி முறையே 19.45 பில்லியன் மற்றும் 17.8 பில்லியன் ஆகிய புள்ளி விபரங்கள் பாரிய பங்காற்றின. CDB ஆனது நிகர மற்றும் மொத்த செயற்பாடற்ற கடன் (NPL) விகிதமாக முறையே 1.27% மற்றும் 2.32% மாக பதிவு செய்துள்ளது. வலுவான திரவ நிலைப்பாடானது ஐந்தொகை சொத்துப் பெறுமதியில் 90% த்தை பதிவு செய்துள்ளது.
மேலும் CDB ஆனது 30% வீத வளர்ச்சியில் ஒழுங்கு முறை தேவையாகிய 10% மற்றும் 3.00 மில்லியன் பங்குதாரர் நிதி போன்றவற்றுடன் 14.43% எனும் போதுமான மூலதன விகிதத்தை பெற்று வலுவான மூலதன நிலைப்பாட்டினை கொண்டுள்ளது. பங்கொன்றிற்கான வருவாயாக ரூ.9.98 வும், பங்கொன்றிற்கான தேறிய சொத்து பெறுமதியாக ரூ.56.32 ஆகவும் பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் அது CDB நிறுவனத்தில் குறைந்தளவு தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்ததுடன், ஐந்தொகையில் தங்கத்தின் நிலைப்பாடு 4.3% மாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பணிப்பாளர் சபை மூலம் பங்குதாரர்களது ஒப்புதலிற்கு பங்கொன்றின் விலையினை ரூ.2.75 ஆக முன்மொழிந்துள்ளனர். கடந்த ஆண்டில் உள்ளக வங்கியியல் தீர்வு செயல்பாடுகள் குறித்த மறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இலங்கை வங்கியல்லாத நிதி நிறுவனம் மூலம் ஒரேயொரு மைய வங்கி தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. CDB வீசா சர்வதேச Debit card அறிமுகம், நாட்டின் மிகப் பெரிய ATM வலையமைப்பின் வழியாக வாடிக்கையாளர்களிற்கு ATM இனை அணுகுவதற்கான வரப்பிரசாதம் மற்றும் CDB பிராண்டட் ATM இனை தலைமை காரியாலயத்தில் கொண்டுள்ளது. CDB ஆனது Sri Lanka Interbank Payment System (SLIPS) இனை கொண்டுள்ள இலங்கையின் முதல் வங்கியல்லாத நிதி நிறுவனம் (NBFI) ஆகும். இப் புதிய முயற்சிகள் அனைத்தும் வாடிக்கையாளர் சேவை தரத்தினையும் மற்றும் சௌகரியத்தையும் அதிகரிக்கின்றது.
மேலும் CDB ஆனது 8 புதிய நிலையங்களை ஆரம்பித்துள்ளதுடன், ஆண்டிறுதிக்குள் 44 நேரடி தொடர்புடைய விநியோக வலையமைப்பினை விஸ்தரிக்கவுள்ளது. மறுஆய்வு காலகட்டத்தில், CDB ஆனது கிராமிய பொருளாதாரத்திற்கு கடன் வழங்கும் நிறுவனமாகவும், தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினையும் செலுத்தியுள்ளது.
CDBஇன் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மகேஷ் நாணயக்கார