2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கப்ராலின் புதல்வர் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் பதவியை ஏற்க மறுப்பு

Super User   / 2013 ஜனவரி 15 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹேலிஸ் எம்ஜிடி நிற்றிங் மில்ஸ் தனியார் கம்பனியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் பதவியை ஏற்க மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் புதல்வாரன சதுர வி. கப்ரால் மறுத்துள்ளார் என பங்குச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் ஹேலிஸ் எம்ஜிடி நிற்றிங் மில்ஸ் தனியார் கம்பனியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக  சதுர வி. கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார் என கடந்த டிசம்பர் 3ஆம் திகதி பணிப்பாளர் சபையினால் அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்த கம்பனியின் பணிப்பாளர் பதவியை ஏற்கும் நிலையில் தற்போது தான் இல்லை என சதுர வி.கப்ரால் அறிவித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தகவல்கள் தெரிவித்தன.

இயந்திர பொறியியலில் உற்பத்தி மற்றும் வடிமைப்பு துறையில் சதுர வி.கப்ரல் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

கப்ரால் இவ்வாறு அறிவித்துள்ளமையினால் அவரது பணிப்பாளர் சபைக்கான நியமனம் வலுவற்றதாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .