2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையில் பாரிய மாற்றமில்லை

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


-ச.சேகர்

கொழும்பு பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்தும் பங்குவிற்பனையில் ஈடுபட்டிருந்ததையும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்தும் பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியதையும் கடந்தவார கொடுக்கல் வாங்கல்களிலிருந்து அவதானிக்க முடிந்தது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,799.69 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3196.81 ஆகவும் அமைந்திருந்தன.

ஜனவரி 28ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 9,164,244,919 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 23,934 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 22,226 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,708 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் இந்தோ மலே, ஜெஸ்டெட்னர், ஈக்குவிட்டி, லங்கா ஃபுளோர்டைல்ஸ் மற்றும் ரேணுகா ஷோ (உரிமைப்பங்குகள்) போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

கொடகல, இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மேர்க்.சிப்பிங், பிம்புத் ஃபினான்ஸ் மற்றும் பீபிள்ஸ் லீசிங் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 54,000.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 49,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1470.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.08 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 203.57 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .