2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஏ.பி.சி. பார்மா நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


போட்டித்தன்மைமிக்க இலங்கை மருத்துவ துறையில் வெற்றிபெறுவதற்கு மருந்தாக்கல் நிறுவனங்கள்  உயர்ரக உற்பத்திகளையும் சிறந்த சேவைகளையும் வழங்க வேண்டியது முக்கியம் என இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தலைவர் காஞ்சன ரத்வத்த தெரிவிக்கின்றார்.

தொழில்சார் மற்றும் ஒழுங்குமுறை சீர்படுத்தும் தரங்களை நிறுவனங்கள் உரிய முறையில் பயன்படுத்தி செயற்படும்போது அத்தகைய நிறுவனங்களுக்கு பொருளாதார ரீதியாகவும் பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மருந்துப்பொருட்கள் விநியோகத்தில் முன்னிலை நிறுவனங்களில் ஒன்றான ஏ.பி.சி பார்மா தனியார் நிறுவனத்துக்கு ஐ.எஸ்.ஓ 9001/2008 தரச்சான்றுதழை வழங்குவதற்காக கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே அவரால் இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், ஏ.பி.சி பார்மாவின் வர்த்தக பங்குதார நிறுவனங்களின் பிரதிநிதிகள், இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த காஞ்சன ரத்வத்த 'ஏ.பி.சி பார்மா நிறுவனம் ஐ.எஸ்.ஓ தரத்தை பின்பற்றி செயற்பட்டதை நாம் வரவேற்கின்றோம். அவர்களது எதிர்கால நடவடிக்கைகளின்போதும் இதே வழிமுறையை பின்பற்றி நடக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அத்தகைய தரத்தை பின்பற்றி தமது பணியை அவர்கள் முன்னெடுத்து செல்ல இலங்கை கட்டளைகள் நிறுவனமும் தமது உதவிகளை வழங்கும்' என்றார்.

ஏ.பி.சி பார்மா நிறுவனம் மருத்துவப்பொருள் இறக்குமதி, விநியோகம் ஆகியவற்றை 1999ஆம் ஆண்டு முதல் செய்துவருகின்றதுடன் இலங்கை மருந்துவப்பொருள் நிறுவனங்களுக்கிடையில் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை வென்றெடுத்த இரண்டாவது நிறுவனமாகும்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஏ.பி.சி பார்மாவின் முகாமைத்துவ பணிப்பாளர் எட்ரியன் பஸ்நாயக்க, வர்த்தக நடவடிக்கைகளிலுள்ள அனைத்து விதமான தரங்களையும் பின்பற்றியதால் எமது நிறுவனத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றுதல் கிடைத்துள்ளது. மருந்துபொருள் நிறுவனமொன்றுக்கான தரம் எம்மிடம் உள்ளனவா என்பதை அவர்கள் பரிசோதிக்கின்றனர். அத்துடன் எமது நடவடிக்கைகளின்போது இத்தகைய தரத்தை தொடர்ந்து எம்மால் முன்னெடுத்து செல்ல முடியுமா என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாகும். எந்தவொரு நிறுவனத்துக்கும் ஒவ்வொரு துறைக்கும் முக்கியமானவர்கள் உள்ளனர். அத்தகைய திறமையான விசேட நபர்கள் இல்லாதுபோனால் நிறுவனத்தின் செயற்பாட்டு கட்டமைப்பு வீழ்ச்சியடையும். அத்தயை நேரத்தில் உரிய தரத்தை முன்னெடுத்து செல்வதில் சிக்கல்கள் தோன்றலாம். எந்தவொரு தனிநபரிலும் நிறுவனம் தங்கியிருக்காமல் தொடர்ச்சியாக தரமான சேவையை வழங்கு முடியுமா? என்பது தொடர்பிலும் அவர்கள் சிந்தித்துள்ளனர்' என குறிப்பிட்டார்.

'அத்துடன் மருந்துப்பொருள் வர்த்தகத்திலுள்ள இன்னொரு முக்கிய விடயம் வெப்பநிலையாகும். எனவே உயர்ரகத்தை பின்பற்ற வேண்டுமானால் நிச்சயம் மருந்துப்பொருள்களை வெப்பநிலைக்கேற்ப களஞ்சியப்படுத்திக்கொள்ளல் மிக முக்கியமாகும். அதிக வெப்பநிலையை போன்று குறைந்த வெப்பநிலையும் மருந்துபொருட்களுக்கான பாதிப்பை ஏற்படுத்தும். மருந்துபொருட்களை களஞ்சியப்படுத்தும் போதும், ஏற்றிச் செல்லும்போதும், விநியோகிக்கும்போதும் வெப்பநிலையை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும்' என மேலும் கூறினார்.

'இத்தகைய தரச்சான்றிதழை வென்றெடுத்தது மகிழ்ச்சியானபோதிலும் தரத்தை தொடர்ச்சியாக பேண வேண்டிய பொறுப்பும் எமக்கு உள்ளது. ஏனெனில் இத்தரச்சான்றிதழை மூன்று வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியுள்ளது. இக்காலகட்டத்தில் கட்டளைகள் நிறுவனம் எமது சேவையை தொடர்ச்சியாக கண்காணித்து வரும். நிறுவனத்தின் சேவைகள் அனைத்தும் பொதுமக்களை இலக்காக வைத்தே மேற்கொள்ளப்படுவதால் மக்களின் நலன்களில் அதிக அக்கறை செலுத்துகின்றோம்' என குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .