2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

புதிய துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயற்பட ரஷ்யா ஆர்வம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

விண்வெளி ஆராய்ச்சி, எண்ணெய் மற்றும் வாயு அகழ்வு, மின்வலு துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது ஆர்வத்தை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான ரஷ்யாவின் புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ள அலெக்சாண்டர் கரச்சாவா அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த இரவு நேர விருந்தில் கலந்து கொண்ட போதே இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

'இரு நாடுகளுக்குமிடையிலான பாரம்பரிய வர்த்தக உறவுகளுக்கு மேலதிகமாக புதிய துறைகளில் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமையும். ரஷ்யாவின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதுடன், புதிய வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஆவலாக உள்ளனர்' என்றார்.

இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷ்யா முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .