2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

குழந்தைகளுக்கு திருமலை மக்கள் வங்கி கிளையினால் புதிய கணக்குகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


திருகோணமலை மக்கள் வங்கி கிளையினால் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இம்மாதம் பிறந்த குழந்தைகளுக்கு 500 ரூபாய் வைப்பில் இடப்பட்டு புதிய கணக்குகள்; ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் 65ஆவது சுதந்திர தினத்தையொட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கி முகாமையாளர் க.செல்வராசா தலைமையிலான  அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை காலை மருத்துவ மனைக்கு சென்று இவற்றினை வழங்கி வைத்தனர்.

இம்மாதம் முதலாம் திகதி முதல்; நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை பிறந்த 15 குழந்தைகளுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.




  Comments - 0

  • Ramesh Saturday, 09 February 2013 04:32 PM

    நல்ல வேலைத்திட்டம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .