2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலவரங்கள்

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}




-ச.சேகர்

வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த கடந்தவார பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முன்னேற்றகரமான நிலையில் நிறைவடைந்திருந்தன. அனைத்து பங்குதாரர்களினதும் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ள ஒரு விடயமாக, அடுத்த வாரம் மத்திய வங்கியின் மூலம் மீளாய்வு செய்யப்படவுள்ள நாணயமாற்றுக் கொள்கையில் பெரியளவில் எதிர்பார்க்கப்படும் கொள்கை பெறுமதியில் வீழ்ச்சி, பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில்  குறிப்பிடத்தக்களவு செல்வாக்கை செலுத்துவதாக அமைந்திருக்கும்.

ஆயினும் மத்திய கால நோக்கில் முதலீடுகளை மேற்கொள்வோருக்கு சவாலானதாக அமைந்திருந்தது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,850.67 ஆகவும், ஸ்ரீலங்கா 20 சுட்டி 3271.25 ஆகவும் அமைந்திருந்தன.

பெப்ரவரி 04ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 5,103,480,066 அமைந்திருந்தது.

கடந்த வாரம் மொத்தமாக 21,300 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 19,744 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,556 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் கொமர்ஷல் டிவல, செலிங்கோ இன்ஸ்., ஷலிமர், லங்கா செரமிக் மற்றும் பிசி பார்மா போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

பிம்புத் ஃபினான்ஸ், சிலோன் பிரின்டர்ஸ், சிலோன் லெதர்(உரிமைப்பங்குகள்), பாரகன் மற்றும் ஜி.எஸ்.பினான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை

கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 54,300.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 49,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1480.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்


கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 127.94 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 200.61 ஆக காணப்பட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .