2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கையில் கைப்பேசி பாவனையாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி?

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பாவனையிலுள்ள தரம் குறைந்த அல்லது பாவனைக்கு பரிந்துரைக்கப்படாத கையடக்க தொலைபேசிகளுக்கு எதிராக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் மூலம்  கடுமையான சட்ட மூலங்கள் கொண்டு வரப்படின் இலங்கையில் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் பாவனையிலுள்ள கையடக்க தொலைபேசிகளில் 30 முதல் 40 வீதமானவை தரம் குறைந்த அல்லது பாவனைக்கு பரிந்துரைக்கப்படாத கையடக்கப்படாத கையடக்க தொலைபேசிகளாக காணப்படுகின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் பாவனையிலுள்ள பாவனைக்கு உதவாத அல்லது தரம் குறைந்த கையடக்க தொலைபேசிகளுக்கு எதிராக உடனடியாக எதிர்வரும் நாட்டிகளில் நடவடிக்கை எடுக்கப்படாவிடினும், எதிர்வரும் 2 அல்லது 3 வருட காலப்பகுதியினுள் படிப்படியாக கடுமையான சட்டங்கள் உள்வாங்கப்படும்' என்றார்.

இந்த சட்ட ரீதியான நடவடிக்கை அமுலாக்கப்படும் பட்சத்தில் குறைந்த வருமானமீட்டும் பாவனையாளர்கள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பதிவு செய்யப்பட்ட முன்னணி கையடக்க தொலைபேசி சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .