2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கடந்த ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதித்துறை வீழ்ச்சி

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டில் 7.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 9.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. அதேபோல, நாட்டின் இறக்குமதியும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 வீதம் வீழ்ச்சியடைந்து 19.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இதன்போது வியாபார இடைவெளி கடந்த ஆண்டில் 4.1 வீதமாக வீழ்ச்சியடைந்து 9.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் மொத்த ஏற்றுமதி 6.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 871 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. அதேபோன்று இறக்குமதி 19.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 1.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

விவசாயத்துறை சார்ந்த உற்பத்திபொருட்களின் ஏற்றுமதி கடந்த வருடம் 2.9 வீதத்தால் அதிகரித்திருந்ததுடன், இதன் பெறுமதி 217.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. தேயிலை ஏற்றுமதி 4 வீதத்தால் அதிகரித்து 138.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனும் பெறுமதி அதிகரிப்பை காண்பித்திருந்தது.

இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் 26 வீத வீழ்ச்சியை காண்பித்திருந்தன. இதன் பெறுமதி 240.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .