2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முதலாவது காலாண்டில் நாணயமாற்று கொள்கையில் மாற்றமில்லை: மத்திய வங்கி

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் நாணயமாற்றுக் கொள்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படமாட்டாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் தொடர்ந்தும் சந்தை வட்டி வீதங்களில் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டு நிதித்தேவை அதிகரிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்படுகிறதா என்பதை மத்தியவங்கி கவனமாக மேற்பார்வை செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் மத்தியவங்கியின் மூலம் நாட்டின் நாணயமாற்றுக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட இறுக்கமான கொள்கை நடைமுறைகளின் காரணமாக மொத்த வியாபார வித்தியாசத்தை 4.1 வீதமாக குறைத்துக்கொள்ள முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .