2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ரேணுகா ஷோ வலஸ் அறிமுகப்படுத்தும் கப்டன் சமைத்த சோயா கறி

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி வீட்டு உற்பத்தி உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான ரேணுகா ஷோ வலஸ் PLC (Renuka Shaw Wallace PLC) அண்மையில் சோயா சந்தையில் முற்று முழுதான புதிய புத்தாக்கமான, டின்னில் அடைக்கப்பட்ட கப்டன் சமைத்த சோயா கறியை அறிமுகம் செய்துள்ளது.

குழுமத்தின் R & D குழுவினால் பலதரப்பட்ட செய்முறைகளை உபயோகித்து இலங்கை பாவனையாளர்களுக்கு விருப்பமான சுவையில் புதிய கப்டன் சாப்பிட தயாராகவுள்ள சோயா கறி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. குழுமத்தின் உறுதியான தரக்கட்டுப்பாடுகளுக்கு அமையவும், இலங்கையின் சிறப்பான சுவையூட்டிகளை உபயோகித்தும் தயாரிக்கப்பட்டுள்ள கப்டன் சமைத்த சோயா கறி, இலங்கையின் பாரம்பரிய சமையற்கலையை வெளிப்படுத்துகிறது.

சோயா கறி தயாரிக்கும் நீண்ட நடைமுறைகளுக்கு எதிர்மாறாக இலகுவாக திறக்கக்கூடிய இந்த 385கிராம் டின்கள் கோழி, கறி, கணவாய் மற்றும் மீன் சுவைகளில் கிடைக்கின்றது. டின்னிலிருந்து நேரடியாக அல்லது பலதரப்பட்ட உணவு வகைகளுடன் இதனை உண்ண முடியும்.

அண்மையில் நடைபெற்ற ரேணுகா ஷோ வலசின் வருடாந்த விற்பனை மாநாட்டில் இந்த உற்பத்தி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நாடுமுழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது வழங்கும் புத்தாக்கம், சௌகரியம் மற்றும் செயற்றிறன் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன.

'அது வழங்கும் சுகாதார நன்மைகள் மற்றும் நெகிழ்வுத்தன்மை காரணமாக சோயா உணவுகள் இலங்கையில் பிரபலமாக உள்ளன' என ஷோ வலசின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஷிலந்த் பொதேஜு தெரிவித்தார். 'கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பொதிகளில் அடைக்கப்பட்ட கப்டன் சோயா மீட் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. நம்பிக்கை மற்றும் இலங்கையின் மிகப்பெரிய டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகளின் ஏற்றுமதியாளர் என்ற வகையில் குழுமத்தின் உற்பத்தி திறன் ஆகியவற்றுடன், எமது முயற்சிகள் இலங்கை சந்தைக்கு சிறப்பான உற்பத்தியை அறிமுகப்படுத்த உதவின' என அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைப்பளு அதிகமான வாழ்க்கை முறையில் இலகுவான உணவுகள் முக்கிய இடத்தை பிடிக்கும் இக்காலகட்டத்தில், கப்டன் சமைத்த சோயா கறி இலங்கயின் சகல பிரிவினரிடயேயும் மிகுந்த வரவேற்பை பெறும் என ரேணுகா ஷோ வலஸ் நம்புகிறது. வேலைப்பளு அதிகமுள்ள குடும்பங்களும் இல்லத்தரசிகளும் மற்றும் வீட்டுச் சமையலுக்கு மாற்று உணவு தேடுகின்ற மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் இது மிகுந்த நன்மை பயக்கும்.

அறிமுக நிகழ்வில் இதுகுறித்து மேலும் விளக்கமளித்த விற்பனை பிரிவின் தலைவர் மஹேஷ் விதானாராச்சி, 'இந்த உற்பத்தியானது சௌகரியமானது, இலாபமானது, மிக முக்கியமாக பாண், இடியப்பம், சோறு, பிட்டு அல்லது ஆப்பம் என எந்தவொரு உணவுடனும் உட்கொள்ள முடியுமாக இருக்கும். ஒருவர் செய்யவேண்டியதெல்லாம் டின்னை திறந்து, விரும்பினால் சிறிது சூடாக்கி, விரும்பிய உணவுடன் உண்ணவேண்டியதுதான். ஒரு டின் 5-6 பேருக்கு போதுமானதாக இருக்கும். இது இரு வருட வாழ்க்கையைக் கொண்டுள்ளது'.

ரேணுகா ஷோ வலசின் வியாபாரங்கள் நுகர்வோர் உற்பத்திகள் (FMCG), உணவு சேவைகள், பால் மற்றும் மரக்கறி உணவு ஏற்றுமதிகளை உள்ளடக்குகின்றது. ரேணுகா அக்ரி ஃபுட்ஸ் PLC மற்றும் ரிச்லைஃப் டெயாரீஸ் ஆகியன குழுமத்திலுள்ள நிறுவனங்களாகும்.

61 நாடுகளுக்கு நிறுவனம் ஏற்றுமதி செய்வதுடன், இலங்கை முழுவதும் 65000 சில்லறை கடைகளுக்கு விநியோகிப்பதுடன் ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனக்களுக்கும் வழங்குகின்றது. கப்டன் சோயா கறி இலங்கை முழுவதுமுள்ள சில்லறை கடைகளிலும் முன்னணி சுப்பர் மார்க்கட்டுகளிலும் கிடைக்கும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .