2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனுசரணை வழங்கும் டயலொக்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

1 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகை பெறுமதியான மூன்று வருட காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் அணிக்கான அனுசரணையை வழங்க டயலொக் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் போட்டிகரமாக இடம்பெற்ற இந்த அனுசரணையாளர் தெரிவுக்காக, இலங்கை தேயிலை சபையும் இலங்கையை சேர்ந்த முன்னணி நிறுவனமொன்றின் சார்பாக இந்தியாவிலிருந்து ஒரு நிறுவனமும் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தன.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு அதிகமாக இலங்கையின் தேசிய கையடக்க தொலைபேசி இணைப்பு சேவைகளை வழங்கும் மொபிடெல் அனுசரணை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அனுசரணை உடன்படிக்கை குறித்து டயலொக் நிறுவனம் விரைவில் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .