2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

எரிபொருள் விலை நிர்ணயத்துக்கான சூத்திரம் அவசியம்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை போன்றவற்றின் நட்டங்களை குறைக்கும் வகையில், இலங்கையில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் சூத்திரமொன்றை தயாரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் ஜோன் நெல்ம்ஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த இரு வலுத்துறையுடன் தொடர்புடைய பிரதான துறைகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதன் கட்டாயம் குறித்து அரசாங்கத்துக்கு நாம் பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.

கடந்த ஆண்டை பொறுத்தமட்டில், இலங்கை மின்சார சபை நாட்டில் நிலவிய கடும் வரட்சியின் காரணமாக பெரும் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது. மின்சார சபைக்கு அவசியமான எரிபொருளை மானிய விலையில் வழங்கியிருந்தமையை தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .