2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சீராக இடம்பெற்ற பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

இலங்கை மத்திய வங்கியின் மூலம் கடந்த வாரம் நாணய மாற்றுக் கொள்கையில் எவ்வித கொள்கை அடிப்படையிலான மாற்றம் ஏற்படுத்தப்படாத நிலையில், பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் சீரான போக்கில் இடம்பெற்றிருந்தமையை அவதானிக்க முடிந்தது. நாணயக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படாத நிலையில், வட்டி வீதங்களிலும் பாரியளவு மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதால் தொடர்ந்தும் பங்குக் கொடுக்கல் வாங்கல்கள் சீரான முறையில் அமைந்திருக்கும் என பங்கு முகவர்கள் பரவலான கருத்தை முன்வைத்திருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,830.26 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3274.25 ஆகவும் அமைந்திருந்தன.

பெப்ரவரி 11ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,074,111,871 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 24,183 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 22,952 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,231 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் மெட்.ரெஸ்.ஹொ, செரண்டிப் லாண்ட், ஹேலீஸ் ஃபைபர், கொம். லீஸ் அன்ட் ஃபின். மற்றும் ஒரியன்ட் ஃபினான்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஷலிமர், என்வி றிசோர்சஸ் (வாக்குரிமை), சிலோன் பிரின்டர்ஸ், அபான்ஸ் ஃபைனான்சியல் மற்றும் நேஷன் லங்கா (உரிமைப்பங்குகள்) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 53,000.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 48,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1470.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.26 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 199.30 ஆக காணப்பட்டிருந்தது. சுமார் ஒரு வருட காலப்பகுதியின் பின்னர், ஸ்ரேலிங் பவுணுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 200ஐ விட குறைவாக கடந்த வாரம் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .