2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவினால் அரசின் பிரபல்யம் குறைவடைகிறதாம்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவீனத்தின் காரணமாக அரசின் மீதான மக்களின் விருப்பு குறைவடைந்து வருவதாகவும், அரசின் பிரபல்யம் நலிவடைந்து வருவதாகவும் றிசேர்ச் கொன்சல்டன்சி பியுரியு மற்றும் பிஸ்னஸ் டைம்ஸ் ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த வருடமும் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்குமா என இந்த ஆய்வில் பங்குபற்றியவர்களிடம் கருத்துக் கோரியிருந்த போது, இதில் பங்குபற்றிய அனைவரும் ஆம் என்ற பதிலையே வழங்கியிருந்தனர்.

2400இற்கும் அதிகமானவர்களிடையே நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சுமார் 2 – 3 வார காலமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஆய்வில் பங்குபற்றியவர்கள் எரிபொருள், உணவுப்பொருட்கள், மின்சாரம், மருந்துப் பொருட்கள், நீர், போக்குவரத்து கட்டணங்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர்.

மின்னஞ்சல் மூலமாகவும், நேரடி விஜயங்கள் மூலமாகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .