2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வட்டவல ப்ளான்டேஷனுக்கு டாட்டா குளோபல் பெவரேஜ்ஜின் முகாமைத்துவ பணிப்பாளர் விஜயம்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


டாட்டா குளோபல் பெவரேஜ் மற்றும் வட்டவல ப்ளான்டேஷனுக்கு இடையிலான நீண்டகால பங்குதார வர்த்தகமானது இந்தியா தமது தேயிலை தொடர்பான புதிய நகலிகளையும் தகவல்களையும் வழங்கி இலங்கை தேயிலை கைத்தொழிலை முன்னெடுக்க சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது என டாட்டா குளோபல் பெவரேஜ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹரிஷ் பாத் தெரிவிக்கின்றார்.

வட்டவல ப்ளான்டேஷனுடனான தமது கூட்டுவர்த்தகமானது நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் அடிப்படையாக கொண்டுள்ளது என குறிப்பிட்ட அவர் இரு நிறுவனங்களும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதாகவும் இந்திய தேயிலைத் துறையானது தமது  தொழில்நுட்பங்களையும்  புதுமைகளையும் இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். 

டாட்டா குளோபல் பெவரேஜ் இலங்கை தேயிலைத்துறையுடன் தொடர்புகளை முன்னெடுத்து வருகின்றதுடன் வட்டவல ப்ளான்டேஷனின் தாய் நிறுவனமான சன்ஷைன்ஸ் குழுமத்திற்;குரிய எஸ்டேட் மெனேஜ்மன்ட் சேர்விஸு;;டன் கைகோர்த்து செயற்படுகின்றது. 25 ஆண்டுகளாக டாட்டா குழுமத்தில் பணியாற்றுகின்ற ஹரிஷ் பாத் வட்டவல ப்ளான்டேஷன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் உள்ளார்.  

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அவர் கருத்து தெரிவிக்கையில் 'நிறுவனம் என்ற வகையில் நாம் இலங்கை தேயிலைத் துறையுடன் தொடர்புட்டுள்ளோம். சன்சைன்ஷ் குழுமத்தின் வட்டவல ப்ளான்டேஷனுடன் எமக்கு 25 ஆண்டுகளாக தொடர்புகள் உள்ளன. மிக கடினமான காலகட்டத்திலும் சிறப்பான காலகட்டத்திலும் எமது இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்பட்டதுடன் இரண்டு நிறுவனங்களும் கடந்த காலகட்டத்தில் வளர்ச்சியை எட்டியுள்ளன. அத்துடன்  எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் எம்மிடம் ஒருமித்த தரிசனமே காணப்படுகின்றது' என்றார். 

வட்டவல ப்ளான்டேஷனுடனான கூட்டுவர்த்தகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,  'இலங்கையில் மிக உறுதியானதும் எழுச்சியானதுமான தேயிலை கைத்தொழில் உள்ளது. அதில் வட்டவல ப்ளான்டேஷன்ஸ் மிக முக்கிய பங்குதாரர்களாக விளங்குகின்றனர். தேயிலைச் சந்தையை இலக்கு வைத்து அவர்கள் மூன்று முக்கிய வர்;த்தக நாமங்களை அறிமுகம் செய்துள்ளனர். அவர்கள் தமது இலக்குகளை எட்டியிருக்கின்றனர். அவர்களது சிறந்த பெறுபேறுகளுக்கும் அர்ப்பணிப்புக்கும் எமது பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் அவர்களுடன் பங்குதாரர்களாக இருப்பதையிட்டு நாம் பெருமையடைகின்றோம். 'வட்டவல கஹட்ட', 'ஷெஸ்டா', 'ரன் டீ' போன்றன மூன்று முக்கிய வர்த்தக நாமங்கள் அவர்கள் வசம் உள்ளது. அத்துடன் டாட்டா குளோபல் பெவரேஜ் நிறுவனம் உறுதியான நிலையில் கால்பதித்துள்ள சந்தையில் இலங்கை தேயிலையை சந்தைப்படுத்தும் நெறிமுறைகளிலும் ஈடுபட்டு வருகின்றது'என்றார்.  

அத்துடன் சன்ஷைன்ஸ் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விஷ்கோவிந்தசாமி டாட்டா குளோபல் பெவரேஜ் நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றுகின்றார். அவரது பணிகள் தமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதாக ஹரிஷ் பாத் தெரிவித்தார்.

டாட்டா குளோபல் பெவரேஜ் நிறுவனத்துடன் தமது நிறுவனம் இணைந்து செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்து தெரிவித்த சன்சைன்ஷ் குழுமத்தின் முகாமைத்து பணிப்பாளர் விஷ் கோவிந்தாமி, 'இரு நிறுவனங்களுக்குமிடையிலான நெருக்கமான உறவுகளால் நாம் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்ட விடயங்கள் ஏராளமாகும். அத்துடன் எமக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. சன்ஷைன்ஸ் நிறுவனம் தீவிர ஆர்வமுடன் தம்மிடமுள்ள சக்தியை ஒன்றுதிரட்டி; எதிர்காலத்தில சர்வதேச சந்தையில் மேற்கொள்ள வேண்டிய புதிய வழிமுறைகளை தேர்ந்தெடுத்து செயற்பட்டு வருகின்றது' என குறிப்பிட்டார்.

டாட்டா குளோபல் பெவரேஜ் 1.5 பில்லியன் டொலர்களை ஈடுபடுத்தி பெவரேஜ் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதுடன் அந்நிறுவனம் உலகின் இரண்டாவது பாரிய தேயிலை உற்பத்தி செய்து விநியோகிக்கின்ற நிறுவனமாக விளங்குகின்றது. 40 இற்கும் அதிமாக நாடுகளில் 60 வர்த்தக நாமங்களில் தேயிலைகளை விற்பனை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .