2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

இலங்கை பல்மருத்துவ சங்கத்துடன் இணையும் சிக்னல்

A.P.Mathan   / 2013 மார்ச் 27 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் வேகமாக நகரும் நுகர்வுப்பொருட்களை வழங்கிவரும் மிகப்பெரிய நிறுவனமான யுனிலீவர் நிறுவனத்தின் முன்னணி வாய்ச்சுகாதார வர்த்தகநாமமான சிக்னல், இலங்கை பல்மருத்துவ சங்கத்தின் (SLDA) 80வது ஆண்டு நிறைவின் வருடாந்த அறிவியல் கூட்டத்தொடரான 'SLDA 80 JIC' க்கு பிரதான அனுசரணையை வழங்குகிறது. இந் நிகழ்வானது எதிர்வரும் ஜுன் மாதம் 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பண்டாநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. முதற்தடவையாக சர்வதேச மாநாடு ஒன்றில்; உலக பல்மருத்துவ சம்மேளனம் (FDI) மற்றும் இலங்கை பல்மருத்துவ சங்கம் போன்றன இணைந்துள்ளன.

இம் மாநாட்டிற்கு உத்தியோகபூர்வ அனுசரணையை யுனிலீவர் சிக்னல் வர்த்தகநாமமும், உத்தியோகபூர்வ பயண பங்காளராக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனமும், பிரதிநிதிகள் மத்தியில் கலாச்சார நிகழ்வுகளுக்கான அனுசரணையை இலங்கை மாநாட்டு செயலகம் (Srilankan Convention Bureau) போன்றன வழங்கவுள்ளன. இம் மாநாட்டில் 1000 க்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளதுடன், பல்மருத்துவ துறையில் தேசிய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற 20 பேச்சாளர்களை கவர்ந்துள்ளது. இம் மாநாட்டின் தொனிப்பொருளாக 'பல் மற்றும் வாய்ச்சுகாதார பராமரிப்பின் புதிய சவால்கள்' என அமைந்துள்ளது. இவ் அறிவியல் திட்டத்தில் Dental Implantology, Fixed Prosthesis, Aesthetic Dentistry, Endodontics பற்சீரமைப்பு (Orthodontics), பல் உணர்திறன் (Tooth Sensitivity), Ceramics மற்றும் சிறியளவிலான வாய் அறுவை சிகிச்சைகள் போன்ற தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த யுனிலீவர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் திரு.அசங்க ரணசிங்க, 'யுனிலீவர் நிறுவனமானது மிகச் சிறந்த ஆற்றலுடைய பற்பசை மற்றும் பற்தூரிகை போன்ற வாய்ப்பராமரிப்பு தயாரிப்புகளை உலகம் பூராகவும் வழங்கிவருகிறது. முதற்தடவையாக அபிவிருத்திகளுக்காக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை அயராது முன்னெடுத்த உலக நிறுவனங்களில் எமது நிறுவனமும் ஒன்றாகும். சந்தையில் முன்னணி வாய்ச்சுகாதார தயாரிப்புகளை வழங்கிவரும் நிறுவனம் எனும் ரீதியில் இலங்கை மக்களின் வாய்ச்சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதுடன், புன்சிரிப்பினையும் பாதுகாப்பது எமது குறிக்கோளாகும். இவ்வருட வாய்ச்சுகாதார மாதத்தினை சிக்னல் வர்த்தகநாமமானது இலங்கை பல்மருத்துவ சங்கத்துடன் இணைந்து மே மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஜுன்; 15ஆம் திகதி வரை முனனெடுக்கவுள்ளோம். SLDA உடனான பங்காண்மை ஊடாக தேசிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் சமூகத்தின் மத்தியில் வாய்ச்சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வுகளை முன்னெடுக்கவுள்ளோம்' என்றார்.

2013 ஆம் ஆண்டு இலங்கை பல்மருத்துவ நாட்காட்டியின் முக்கிய நிகழ்வாக உள்ள இம் மாநாடு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பல்மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர்.சுரேஷ் சண்முகநாதன், 'முதற்தடவையாக சர்வதேச மாநாட்டொன்றில் உலக பல்மருத்துவ சம்மேளனம் (FDI) மற்றும் இலங்கை பல்மருத்துவ சங்கம் போன்றன பங்கேற்கவுள்ளன. இம்மாநாட்டில் உலகம் பூராகவும் இருந்து வருகை தரும் பங்கேற்பாளர்கள் மத்தியில் இத்துறையை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மூலம் புதிய தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய வகையிலான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் ஆகியன முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் இம் மாநாட்டிற்கு கடந்த 25 ஆண்டுகளாக பிரதான அனுசரணையையும், தொடர் ஆதரவினையும் வழங்கிய யுனிலீவர் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எம்மைப் போன்று யுனிலீவர் நிறுவனத்தினரும் இலங்கை மக்களிடையே குறிப்பாக, பாடசாலை மாணவர்களிடையே வாய்ச்சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து ஊக்குவிக்கும் ஒரே உணர்வினை கொண்டிருந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்' என தெரிவித்தார்.

மேலும் அவர், உத்தியோகபூர்வ பயண பங்காளராக இணைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் பிரதிநிதிகள் மத்தியில் கலாச்சார நிகழ்வுகள், சுற்றுலாப் பயணங்களை முன்னெடுக்கவுள்ள இலங்கை மாநாட்டு செயலகம் (Srilankan Convention Bureau) ஆகியவற்றிற்கும் தமது நன்றியை தெரிவித்தார். இவ்விரு நிறுவனங்களும் உலகளவில் இவ் மாநாட்டினை உயர்த்துவதற்கான உதவிகளை வழங்கி வருகின்றது என்றார்.

இலங்கை மக்களிடையே வாய்பராமரிப்பு பழக்கங்கள் மற்றும் சிறந்த வாய்ச்சுகாதார பயிற்சிகள் போன்றவற்றை ஊக்குவிப்பது யுனிலீவர் நிறுவனத்தின் வாய்ச்சுகாதார பராமரிப்பு தயாரிப்புகளின் பொறுப்பாகும். யுனிலீவர் நிறுவனத்தின் வாய்ச்சுகாதார தயாரிப்புகள் அனைத்தும் உலக பல்மருத்துவ சம்மேளனம் (FDI) மற்றும் சர்வதேச பல்மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பு (IADR) போன்றவற்றின்; ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் தயாரிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .