2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

இலங்கையில் அறிமுகமாகும் கொன்சல் வலு சீராக்கும் இயந்திரங்கள்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுனைட்டட் டிராக்டர்ஸ் அன்ட் எக்யுப்மன்ட் (UTE) மூலம், கொன்சல் வலு சீராக்கும் இயந்திரங்கள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிரதானமாக UPS (தடையில்லாத மின் விநியோக கட்டமைப்புகள்) இதில் உள்ளடங்குகின்றன. கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் UTE நிறுவனத்தின் தலைவர் பிரியத் பெர்னான்டோ மூலம் இந்த கொன்சல் வலு சீராக்கும் இயந்திரங்கள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

UTE நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி றியாத் இஸ்மைல் கருத்து தெரிவிக்கையில், 'எமது சந்தை ஆய்வுகளின் மூலம், சந்தையில் உயர் வலுத்திறன் வாய்ந்த தீர்வுகளுக்கான கேள்வியும், அவசியமும் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடிறனில் அமைந்த IGBT PWM தொழில்நுட்பத்தினாலான உயர் கொன்சல் மெகாலைன் தெரிவுகளில் அமைந்த UPSகளின் மூலம் இந்த கேள்வியும், அவசியமும் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக நாம் தொழித்துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கான தீர்வுகளை வழங்கும் வகையில் இந்த தயாரிப்புகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளோம். விசேடமாக, ஹோட்டல்கள், ஆடைத்தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், சுகாதார பராமரிப்பு நிலையங்கள், வங்கிகள், தொலைத்தொடர்பாடல் துறைகள் மற்றும் பொறியியல் ஆலோசனை நிலையங்கள் போன்ற அதிகளவு தங்குதடையின்றிய மின்சாரத் தேவையுடைய வர்த்தக நடவடிக்கைகளுக்கு தீர்வாக இந்த கொன்சல் பொருட்கள் அமைந்துள்ளன. இந்த கொன்செல் UPS தெரிவுகள் 1kVA இலிருந்து 600kVA வரையில் காணப்படுகின்றன.

இந்த அறிமுக நிகழ்வில் கொன்சல் இந்தியாவின் பணிப்பாளர் என்.பி.கிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில், 'டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அமைந்த உயர் மீடிறன் கொண்ட IGBT PWM தொழில்நுட்பத்தின் மூலம், பாதுகாப்பு, தங்கியிருக்கக்கூடிய அத்தியாவசிய மின்வலுத் தேவைகள் போன்றன உறுதி செய்யப்படுகிறது. மேலும், கொன்சல் மின் சாதனங்கள் முன்னணி அசல் சாதனங்கள் தயாரிப்பாளர்களான Wipro GE, Philips medical systems மற்றும் Siemens India போன்றவற்றின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன' என்றார்.

UPSகளுக்கு மேலதிகமாக, மின்நிலைப்படுத்திகளை (Stabilizers) உற்பத்தி செய்வதில் இந்தியாவில் 30 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தை கொன்சல் கொண்டுள்ளது. இந்த கொன்சல் மின்நிலைப்படுத்திகளும் இலங்கையில் UTE மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

போட்டிகரமான விலைகளுக்கு புகழ் பெற்ற கொன்சல் தயாரிப்புகள், கொன்சல் கொன்சொலிடேட் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 30 வருட கால அனுபவத்தின் மூலம் இந்தியாவின் மின்சார துறைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படுகின்றன. கொன்சல் கொன்சொலிடேட் பிரைவேற் லிமிடெட் நிறுவனம் ISO 9000 மற்றும் ISO 14001 சான்றை பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பனியின் நிபுணத்துவம் என்பது, வெவ்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு மின்வலு தீர்வுகளை அவற்றின் தேவைகளுக்கமைய வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

UTE நிறுவனத்தின் பொறியியல் மற்றும் கட்டுருவாக்க பிரிவான, ESS மூலம் பொறுப்பேற்கப்படும் பெருமளவான டேர்ன்கி செயற்திட்டங்களுக்கு கொன்சல் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை ESS மேற்கொள்கிறது. ESS தீர்வுகளில் power generator installation, power plant synchronizing மற்றும் control systems, automatic power transfer switchgear, sewage மற்றும் waste treatment போன்றன உள்ளடங்குகின்றன.

இந்த பிந்திய அறிமுகம் குறித்து பிரியத் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், '6 தசாப்த காலப்பகுதிக்கு மேலாக UTE தமது பொறியியல் தீர்வுகளுக்கான உறுதியான மதிப்பை பெற்றுள்ளது. கொன்சல் தயாரிப்புகளின் அறிமுகத்தின் மூலம், எமது வாடிக்கையாளர்கள் UTEன் உயர் தரம் வாய்ந்த விற்பனைக்கு பிந்திய சேவைகளை பெற்றுக் கொள்வதும் உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .