2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வருமான வரி திணைக்களம் கொழும்புக்கு வெளியே

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை – கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள வருமான வரி திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் கொழும்பு நகருக்கு வெளியே கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக திணைக்களத்தை சேர்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதன் காரணமாக, அண்மையில் பல மில்லியன் ரூபா செலவில் மீள நிர்மாணிக்கப்பட்ட இந்த வருமான வரி திணைக்களம் மக்களுக்கு பயனற்ற விதத்தில் அமைந்துவிட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும்படி மக்கள் விடுதலை முன்னணி கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோரிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

  Comments - 0

  • jenu Wednesday, 01 May 2013 01:49 PM

    பொருளாதார வளர்ச்சிக்கு பயனளிக்கும் ஒரு செயற்பாடாக கருதுகிறேன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .