2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விடுமுறைகாலத்துக்கு பொருத்தமான ட்ரையம்ப் உள்ளாடைகள்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


விடுமுறைக்காலத்தில் அனைவரும் பெரும்பாலும் களியாட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் ஈடுபடுவது வழமை, இந்த பருவகாலத்தில் அணிவதற்கு உகந்த உள்ளாடை வகையை ட்ரையம்ப் அறிமுகம் செய்துள்ளது. சகல பெண்களும் எதிர்பார்ப்பது, சிறந்த உள்ளக சௌகர்யத்தை வழங்கும் உள்ளாடை வகைகளையே, இந்நிலையில் பட்டிகள் கழன்று தொங்கும், பிராவின் உட்பகுதி வெளியே தென்படும் வகையிலான உள்ளாடைகள் பெண்களுக்கு பெரிதும் அசௌகர்யத்தை ஊட்டுவதாக அமைந்திருக்கும். பொருத்தமற்ற வகையில் அமைந்த உள்ளாடைகள் உங்கள் விடுமுறைக் காலத்தை பாதிப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விடுமுறை காலத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் திகழ விரும்பினால், உங்கள் தோற்றத்துக்கு உகந்த உள்ளாடைகளையும் கொள்வனவு செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.

உள்ளாடைகள் உற்பத்தியில் முன்னோடிகளாக திகழும் ட்ரையம்ப் இன்டர்நஷனல், இந்த விடுமுறை காலத்துக்கு பொருத்தமான உள்ளாடை வகைகளை பரிந்துரை செய்துள்ளது. எந்த வயதினருக்கும் ஏற்ற, வௌ;வேறு வடிவில், அளவுகளில் அமைந்த உள்ளாடைகள் தெரிவுகளை ட்ரையம்ப் தன்னகத்தே கொண்டுள்ளது. 

இந்தியா மற்றும் இலங்கை உற்பத்தி நிர்வாக செயற்பாடுகளுக்கான முகாமையாளர் மீரா ஜெரோம் கருத்து தெரிவிக்கையில், 'ரீ-சேர்ட் பிரா வகைகள் பட்டி இல்லாத, பட்டியுடன் மற்றும் கழற்றி பிரித்துக் கொள்ளக்கூடிய பட்டிகளை கொண்டு காணப்படுகின்றன. கழற்றிக் கொள்ளக்கூடிய பட்டியுடனான ரீ-சேர்ட் பிரா வகை, குறுக்காக அணியக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. அத்துடன் ஒன்றை தோள் பகுதியிலும், பட்டியில்லாமலும் அணியலாம். இவை மூன்று அடிப்படை வர்ணங்களில் விற்பனைக்குள்ளன. கறுப்பு, தோல் நிறம் மற்றும் வெள்ளை என்பன அவையாகும்.  ஓவ்வொரு 6 மாதத்திலும் புதிய வர்ணமொன்று உள்வாங்கப்படுகிறது' என்றார். 

இந்த நத்தார் பண்டிகை காலப்பகுதியில், ட்ரையம்பின் சேதன பருத்தி பிரா வகைகள் அதிகளவு சொகுசை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த விடுமுறை காலத்தில் சிறந்த தோற்றத்துடன், சௌகர்யத்துடன் திகழ எதிர்பாhக்கும் பெண்களுக்கு மிகவும் பொருத்தமான தெரிவாக இது அமைந்துள்ளது. இவை பட்டியை கொண்டிராமையால், பாடசாலை சீருடைகளுக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளன. 

மினிமைசர் தெரிவுகளுடன் இந்த நத்தார் காலப் பகுதியை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிடுங்கள். அழகிய கழுத்து பட்டிகளையும், அழகிய எம்புரோய்டரி வேலைப்பாடுகளையும் தோள்பட்டை பட்டியில் கொண்டுள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X