Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 13 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வடக்கு மாகாணம், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண நகரம் பிரதான நீரோட்டத்திலுள்ள சமூக கட்டமைப்புடன் மிக விரைவாக மீண்டும் இணைந்து கொண்டுள்ளதுடன், உயிரோட்டமுள்ள சமூக, சுற்றுலா மற்றும் பொருளார கேந்திர மையமாகவும் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றது.
பெருமளவான பொருளாதார நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில், மிகச் சிறப்புவாய்ந்த தனது பல்வகை வர்ணப்பூச்சுக்களின் (பெயின்ட்) மூலம் வட மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு செயற்றிறன்மிக்க ஆதரவை வழங்குவதையிட்டு லங்கெம் ரொபியலக் பெருமிதம் அடைகின்றது.
லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனமானது தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு முன்னெடுப்பில் ஒரு அங்கமாக யாழ். புற்றுநோய் வைத்தியசாலைக்கு முழுமையாக பூசுவதற்கு தேவையான ஒட்டுமொத்த வர்ணப்பூச்சு வகைகளையும் வழங்கி இருக்கின்றது. தெல்லிப்பளையில் அமைந்துள்ள இவ்வைத்தியசாலை 120 படுக்கைகளை கொண்டிருப்பதுடன் வடக்கு மாகாணத்திலுள்ள பல நூற்றுக்கணக்கான புற்றுநோயாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றது. இவ் வைத்தியசாலைக்கு வர்ணம் பூசுவதற்காக பயன்படுத்தப்பட்ட லங்கெம் உற்பத்தி வகைகளுள் - எமல்சன், எனாமல், வெதர்கோர்ட், கென்டிஸ் (விஷேட தோற்றப்பாடுகளை தரவல்ல விலை அதிகமான பெயின்ட்), அன்டிகுரோசிவ் பெயின்ட்கள், அலுமீனியம் வூட் பிரைமர் போன்றவையும் உள்ளடங்கும்.
லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. றுவான் ரி. வீரசிங்க கூறுகையில், 'இங்கு பிரதானமாக வெள்ளை வர்ணமும் அதனுடன் இழையோடியதாக நடுநிலை மங்கலான வர்ணங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த வர்ணங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு ஆறுதல் தருவதாகவும் இருக்கின்றன. இவ் வைத்தியசாலையின் மருத்துவ வசதியை பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான புற்றுநோயாளர்களின் வாழ்க்கையில், எமது வர்ணங்களின் ஊடாக மகிழ்ச்சியை கொண்டுவர முடிந்ததையிட்டு உண்மையிலேயே நாம் மிகுந்த மனநிறைவும் புளகாங்கிதமும் அடைகின்றோம்' என்று கருத்துத் தெரிவித்தார்.
இதேவேளை, 30 வருடங்களின் பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீள திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு தேவையாகவிருந்த பெயின்ட் வகைகளையும் விநியோகம் செய்த நிறுவனமாக லங்கெம் ரொபியலக் திகழ்கின்றது. இதனது மீள் கட்டுமான பணிகளின் போது பயன்படுத்தப்பட்ட லங்கெம் ரொபியலக் உற்பத்திகளுள் - வோல்கோட், வோல்பில்லர், ஸ்கிம்கோட், பிரில்லியன்ட் வைற் எமல்சன் மற்றும் மார்பிள் கிறே போன்றவை உள்ளடங்கியிருந்தன.
'யாழ். நகரில் அமைந்துள்ள இவ்வாறான முக்கியத்துவமிக்க கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுவதற்காக நாம் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் பெருமிதம் கொள்கின்றோம். வடக்கில் உள்ள முக்கிய உயிர்நாடியான கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களுள் ஒன்றாக கருதப்படுவதும், வட மாகாணத்தை நாட்டின் ஏனைய பகுதியுடன் இணைப்பதுமான யாழ். புகையிரத நிலையத்தின் ஊடாக நாளாந்தம் பல்லாயிரக்கணக்கானன மக்கள் வந்துபோவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இக்கட்டிடமானது புகைசார் சேதங்களுக்கு முகம்கொடுத்து தூர்ந்துபோயிருந்த ஒரு கட்டிடம் ஆகும். எனவேதான் நாம் விஷேடமாக உருவாக்கப்பட்ட உற்பத்திகளை இதற்கென பயன்படுத்தியுள்ளோம். இவை இக் கட்டிடத்தை பாதுகாப்பதுடன், அதனது புதுப் பொலிவை நீண்டகாலத்திற்கு பேணுவதாகவும் இருக்கும். தனது தரம் மற்றும் நம்பகத்தன்மையின் உறுதிப்;பாடு என்பவற்றில் வெளிப்படுத்திய சிறப்புத்துவத்திற்காக லங்கெம் ரொபியலக் ஆனது மிகவும் பிரபல்யத்தை பெற்றுள்ளது. மிகக் கடினமாக உழைக்கும் இக் கட்டிடங்கள் லங்கம் பெயின்ட் வகைகளின் மூலம் நல்லதொரு நிலையைப் பெற்றுள்ளன' என்றும் திரு. வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், 'யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வட மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள், தொடர்மாடிகள் மற்றும் குடிமனை கட்டிட தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இப் பின்னணியில், பெருமளவான உள்ள10ர் குடியிருப்பாளர்கள் தமது வாழ்விடங்களுக்கு வர்ணம் பூசுவதற்காக லங்கெம் ரொபிலக் பெயின்ட் வகைகளையே தெரிவு செய்திருக்கின்றனர் என்பதை காண்பது மனதுக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக காணப்பட்டது. இந்த வாடிக்கையாளர்களுடன் நாம் கட்டியெழுப்பி இருக்கின்ற உறவு, மிக உறுதியானதும் நீண்டகாலம் நிலைத்திருப்பதும் ஆகும்' என்றார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்கு வர்ணம் பூசுவதில் ஈடுபட்டு வரும் நாம், இலங்கையின் முன்னணி வர்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தியாளராகவும் அதேபோல் முற்றுமுழுதாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வளர்ச்சியடைந்த நிறுவனமாகவும் திகழ்வதையிட்டு பெருமிதம் அடைகின்றோம். எமது வாடிக்கையாளர்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்ற தனிச்சிறப்புமிக்க மரபுரிமை இதுவே ஆகும். நாடு முழுவதிலும் உள்ள பல தலைமுறைகளைச் சேர்ந்த இலங்கையர்களின் வாழ்க்கையை வர்ணமயமாக்கியுள்ள எமது இந்தப் பயணமானது நீண்டதும் பல காத்திரமான நிகழ்வுகளை உள்ளடக்கியதுமாகும்' என்று வீரசிங்க கூறிமுடித்தார்.
35 minute ago
47 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
8 hours ago