Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் லொத்தர் சீட்டிழுப்பு முறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய மஹாபொல லொடோ, கடந்த ஒரு வருட காலப்பகுதியினுள் இரு 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாபெரும் பணப்பரிசுகளை வழங்கியுள்ளது. 2014 ஜுலை மாதம் முதலாவது பரிசை வழங்கியிருந்ததுடன், இரண்டாவது மாபெரும் பரிசை 2015 பெப்ரவரி மாதம் வெளியிட்டிருந்தது.
4 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாபெரும் பரிசை மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த ருவன் சிரிமான்ன வெற்றியீட்டியிருந்தார். தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலை காப்பாளராக பணியாற்றி வரும் இவர், தனது அதிர்ஷ்டலாபச் சீட்டில் 12, 14, 57 மற்றும் 65 ஆகிய இலக்கங்களை தெரிவு செய்து விளையாடியிருந்தார். இந்த பரிசை வெற்றியீட்டிய அதிர்ஷ்டலாப சீட்டை கொள்வனவு செய்வதற்கு முன்னைய நாளிலும் இவர் இதே விதமாக விளையாடியிருந்ததுடன், இந்த இலக்கங்கள் தமக்கு வெற்றியை பெற்றுத்தரும் என உறுதியான நம்பிக்கையை கொண்டிருந்தார்.
வெற்றியீட்டிய M லொடோ டிக்கட் என்பதும், மஹரகம பிரதேசத்தில் அமைந்துள்ள மஹாபொல லொடோ விற்பனையகத்திலிருந்து விற்பனையாகியிருந்தது. இந்த விநியோகத்தரின் வழமையான வாடிக்கையாளராக சிரிமான்ன திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தமது பாட்டியின் மருத்துவ செலவுகளை செலுத்த வேண்டியிருந்த இக்கட்டான தருணத்தில் சிரிமான்ன M லொடோ மாபெரும் பரிசை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிகரித்துச் செல்லும் செலவீனங்களை தாங்கிக் கொள்ள முடியாத நிலையிலிருந்த அவருக்கு, மிகவும் அவசியமான தருணத்தில் இந்த மாபெரும் பரிசுத் தொகை கிடைத்திருந்தது.
மேலும், ஒரு வருட காலப்பகுதியினுள், இரண்டாவது மாபெரும் வெற்றியாளராக இவர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலாவது பரிசு ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த அரச நிறுவனமொன்றில் பணியாற்றும் நபர் ஒருவருக்கு கிடைத்திருந்தது. மேலும், வெற்றியீட்டிய முதலாவது M லொடோ டிக்கட் மாற்றுத்திறன் வாய்ந்த இளைஞர் ஒருவரின் மூலம் இயக்கப்பட்ட மஹாபொல லொத்தர் சீட்டு விற்பனை நிலையத்திலிருந்து விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மஹாபொல லொடோ கூட்டாண்மை தொடர்பாடல்கள் முகாமையாளர் ஹர்ஷினி சிரிநந்த கருத்து தெரிவிக்கையில், 'மஹாபொல லொடோ அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பின் இரண்டாவதாக மாபெரும் பரிசை சிரிமான்ன வெற்றியீட்டியுள்ளமை எமக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு வருட காலப்பகுதியினுள் நாம் இரு தடவை 4 மில்லியன் ரூபாய் வீதம் மாபெரும் பரிசுகளை வழங்கியுள்ளோம். சிரிமான்ன தமது குடும்பத்துக்கு மிகவும் அவசியமான காலப்பகுதியில் இந்த பரிசை வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுபோல, இலங்கையர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை பணப்பரிசுகள், தொழில் முயற்சி வாய்ப்புகள் மற்றும் புலமைப்பரிசில்கள் போன்றவற்றின் மூலமாக மஹாபொல லொடோ தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago