2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வீவா 'பத்தும் வாசி' வெகுமதி திட்டம்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

க்ளெக்சோ ஸ்மித்கிளைன் நிறுவனத்தின் புகழ்பெற்ற மோல்ட் சேர்க்கப்பட்ட ஆகார பான வர்த்தகநாமமான வீவா ஆனது, இலங்கையில் நம்பகமான வீட்டுப் பாவனை பொருட்கள் மற்றும் இலத்திரனியல் தீர்வுகளை வழங்கி வரும் சிங்கர் நிறுவனத்துடன் இணைந்து 'பத்தும் வாசி' எனும் நுகர்வோர் ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு தமது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வீட்டின் உட்புற தோற்றத்தை புதுப்பொலிவாக்கிக் கொள்ளக்கூடிய வகையில் வீவா 'பத்தும் வாசி' திட்டத்தின் ஊடாக பிரபல வர்த்தக குறியீட்டினை கொண்ட வீட்டுப் பாவனை பொருட்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்குவிப்பு திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சிங்கர் காட்சியறைகளில் கொள்வனவில் ஈடுபடும் போது 100 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுப் பாவனை பொருட்கள் மற்றும் நாடு முழுவதுமுள்ள சிங்கரிடமிருந்து விலைக் கழிவுகள் போன்றன வழங்கப்படவுள்ளன.

'பெறுமதி வாய்ந்த வீட்டுப் பாவனை பொருட்கள் மூலம் உங்கள் இல்லத்தை புதுப்பித்துக் கொள்வதானது வாழ்வை சௌகரியமாக்குவதுடன், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் அமையும்' என GSK நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ரவீந்த்ர டி கூங்கே தெரிவித்தார்.

'இந்த திட்டத்தின் ஊடாக அனுகூலங்களை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் 400கிராம் வீவா புத்தாண்டு ஊக்குவிப்பு பக்கட்டினை கொள்வனவு செய்து, அதனுள் காணப்படும் சுரண்டும் அட்டையிலிருந்து தமக்குரிய அன்பளிப்பு மற்றும் கழிவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சுரண்டும் அட்டையிலும் பெறுமதி வாய்ந்த ரைஸ் குக்கர்கள், குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் சிங்கரிடமிருந்து விசேட கழிவுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம்' என மேலும் தெரிவித்தார்.

புதுவருட காலப்பகுதி என்பது அனைவருக்கும் அதிகளவு வேலைப்பளு நிறைந்த காலமாகும். இந்த பருவகாலத்தில் அதிகளவு இடம்பெறும் உள்நாட்டு சமூக நடவடிக்கைகளில் பங்குபற்ற இலங்கையருக்கு அதிக ஆற்றல் தேவைப்படலாம். வீவா 'பத்தும் வாசி' திட்டமானது சுவையான ஆற்றல் மிக்க ஒரு கோப்பை வீவாவினை வழங்கும் அதேவேளை வாழ்க்கைக்கு சௌகரியத்தை ஏற்படுத்தல் எனும் அதன் உறுதிமொழிக்கு அமைவாக இந்த புத்தாண்டினை குதூகலத்துடன் கொண்டாடுவதற்கான வசதியை வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளது.

'புத்தாண்டு காலத்தில் பெரும்பாலான இலங்கையர்கள் மிகவும் வேளைப்பளு உடையவர்களாக இருப்பதனால், பாரம்பரிய வழிகளில் வீட்டுப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்' என GSK நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க தெரிவித்தார்.

மோல்ட் செறிவு, பாலின் நலச்செழுமை மற்றும் போஷாக்குகளை கொண்டுள்ள வீவா மோல்டட் ஆகார பானம் என்பது உணவிலிருந்து அவசியமான சக்தியை பெற உதவுகிறது. வீவா என்பது மக்களிற்கு சிறந்த உணர்வையும், நீண்ட ஆயுளையும் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் உலகின் முன்னணி ஆராய்ச்சி அடிப்படையிலான மருத்துவ மற்றும் சுகாதார பாதுகாப்பு நிறுவனமாக க்ளெக்சோ ஸ்மித்கிளைன் நிறுவனத்தின் வர்த்தகநாமமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X