A.P.Mathan / 2015 மே 03 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பனியின் பாரிய விற்பனை முகவர்கள் வலையமைப்புடன் நேரடியாக தொடர்பை பேணும் விற்பனை பிரதிநிதிகளின் சிறந்த செயற்பாடுகளை களனி கேபிள்ஸ் பிஎல்சி கௌரவித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால பங்கேற்றிருந்தார்.
மேல் பிராந்தியம் - 2இன் தர்ஷன கம்லத் சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளருக்கான விருதை பெற்றுக் கொண்டதுடன், களனி விற்பனை பிராந்தியத்தின் சமீர சஞ்சீவ சிறந்த விற்பனை பிரதிநிதியாக தெரிவாகியிருந்தார்.
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால இந்நிகழ்வில் உரையாற்றுகையில், கம்பனியின் முதுகெலும்பாக விற்பனை செயலணியினர் அமைந்துள்ளனர். உயர்ந்த பதவி நிலைகளை பெற்றுக் கொள்ள அவர்கள் கூட்டாண்மை ஏணியில் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த சூழலில் அவர்களுக்கு இது ஒரு சிறந்த ஊக்குவிப்பாக அமைந்திருக்கும் என குறிப்பிட்டார்.
'வழமையாக ஒவ்வொரு ஆண்டைப் போலவும், கடந்த ஆண்டிலும், எமது அர்ப்பணிப்பான விற்பனை செயலணி எமது கம்பனியின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தது. அவர்கள் அனைவரின் பங்களிப்புக்கும் நான் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், வெற்றியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
நூற்றுக்கு நூறு வீதம் இலங்கையின் கம்பனியாக கடந்த நான்கு தசாப்த காலமாக களனி கேபிள்ஸ் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கம்பனி 'Super Brands' தரத்தை இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் 2008 ஆம் ஆண்டில் எய்தியிருந்ததுடன், துறையில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கலின் போது, பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக களனி கேபிள்ஸ் பிஎல்சி 2013 ஆம் ஆண்டில் தங்க விருதையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .