2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தகவல் தொழில்நுட்பம்சார் தீர்வுகளை வழங்கும் SWS

A.P.Mathan   / 2015 மே 21 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.நிப்றாஸ்

கிழக்கு மாகாணத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கான தகவல் தொடர்பாடல் தீர்வுகளையும் முழுமையான பராமரிப்பு சேவைகளையும் வழங்குவதில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக SWS Networks and Engineering (Pvt) limited திகழ்கின்றது. 

இம் மாகாணத்திலுள்ள இரு மாவட்ட செயலகங்கள், பல்கலைக்கழகங்கள், பல பிரதேச செயலகங்கள், வலயக் கல்வி பணிமனைகள் உள்ளடங்கலாக கணிசமான அரச அலுவலகங்களுக்கும் அதேபோல் அதிக எண்ணிக்கையிலான அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் SWS தனது உயர்தரமான சேவைகளை வழங்கி வருகின்றது. 

SWS ஆனது, 'உயர் செயலாற்றல் உள்ள வெற்றிரமான ஒரு தகவல் தொழில்நுட்ப கம்பனியாக திகழ்தல்' என்ற தூரநோக்கிற்கு அமைய இலங்கை கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயற்படும் ஒரு நிறுவனமாகும். 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனமானது திருமலை வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியிலும் மெக்கெய்சர் வீதி, உவர்மலை, திருகோணமலை என்ற முகவரியிலும் தனது இரு அலுவலகங்களை நிறுவியதன் மூலம் சேவைப் பரம்பலை விஸ்தரித்திருக்கின்றது. ஆரம்பத்தில் இயந்திரவியல் சேவை வழங்குநராக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று முழுமையான தகவல் தொடர்பாடல் தீர்வுகள் வழங்குனராக வளர்ச்சியடைந்திருக்கின்றது. 

இந் நிறுவனமானது அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் அவற்றை பராமரித்தலில் சிறப்புதுவம் பெற்றுள்ளது. அத்துடன் அனைத்து வகையான (தனிநபர், லப்டொப்) கணினிகள் மற்றும் அதனோடிணைந்த உபகரணங்களை விநியோகித்தல், அவற்றை திருத்துதல், தரமேம்படுத்தல் மற்றும் கணினி வலையமைப்பை நிறுவிப் பராமரித்தல், வலையமைப்பிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், CCTV கண்காணிப்பு கமெரா கட்டமைப்பை நிறுவுதல், Depot Maintenance, இணையத்தள வடிவமைப்பு போன்ற பல சேவைகளை நியாயமான கட்டணத்தில் வழங்கி வருகின்றது. இச் சேவை வழங்கலை முதற்தரமாக மேற்கொள்வதற்காகவும் விற்பனைக்கு பிந்திய சேவையை சிறப்பாக்குவதற்காகவும் அவசியமான தொழில்நுட்ப, பௌதீக, ஆளணி வளங்களையும் SWS நிறுவனம் தன்னகத்தே கொண்டியங்குகின்றது. 

குறிப்பாக, மாதாந்த அடிப்படையிலான அதிவேக தரவுப் பாதுகாப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பரிசோதனைகள், விற்பனைக்கு பிந்திய இலவச உபகரண சீரமைத்தல் சேவை, தேவையான நேரங்களில் மென்பொருட்களை தரமேம்படுத்துவதற்கான சேவை, தரவுத்தள பராமரிப்பு மற்றும் backup சேவைகள், நேரடியாக தங்களது அலுவகத்திற்கு அல்லது வீட்டிற்கு தொழில்நுட்பவியலாளர்களை அனுப்பி உபகரணங்களை திருத்தும் வசதி, வலையமைப்பை தொலைவிலிருந்து கட்டுப்படுத்துவதற்கான நவீன வசதிகள், 24 மணிநேர அவசர அழைப்புச் சேவை போன்ற பல பெறுமதிசேர் சேவைகளையும் வழங்கி வருகின்றது. 

SWS Networks and Engineering (Pvt) limited நிறுவனமானது தனது சமூகப் பொறுப்புணர்வை பேணும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சிநெறிகளை நிறைவுசெய்யும் மாணவர்களுக்கு வெளிக்கள பயிற்சிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதுடன், தமது சேவைகளை பெற்றுக் கொள்ளும் அரச, தனியார் அலுவலக ஊழியர்களின் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளதாக முகாமைத்துவ பணிப்பாளர் எம்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • myuran Thursday, 21 May 2015 04:23 PM

    its 1st it company in east , useful for our area

    Reply : 0       0

    irfan Thursday, 21 May 2015 04:38 PM

    good job bro

    Reply : 0       0

    charith bandara Wednesday, 27 May 2015 06:52 AM

    very nice work mr. arul, our university guys team work ,very nice software development for QSA , new developing and signing company ,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .