Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 18 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமானது கொழும்பு பங்குச்சந்தையின் இடைக்கால முடிவுகளின் பிரகாரம், வரிக்கு பின்னரான இலாபமாக 701 மில்லியன் ரூபாவை பெற்று 25% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
CDB நிறுவனத்தின் ஐந்தொகை குறிப்பு 38.01 பில்லியன் ரூபாவாக பதிவாகி கடந்த வருடத்தை விட 13% வீத வளர்ச்சியையும், கடன் புத்தகம் 14% ஆல் சரிந்து ரூ.29.38 பில்லியன் வளர்ச்சியையும் காட்டிய அதேசமயம், வைப்புகள் மற்றும் சேமிப்பு இலாகாவானது 10% வளர்ச்சியுடன் 27.07 பில்லியன் ரூபாவாக பதிவு செய்து அதன் செயற்திறனை வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது. தேறிய சொத்துக்கள் 20% வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் ரூ.4.30 பில்லியன் பதிவு செய்யப்பட்டிருந்தது. வருமானம் 9% வளர்ச்சியை காட்டிய அதேவேளை குறைந்த வட்டி காரணமாக தேறிய வட்டி வருமானம் 2.87 பில்லியன் ரூபா பதிவாகி 23% வளர்ச்சியை எட்டியிருந்தது.
மேலும் நிதிச் சேவைகள், காப்பீட்டு தீர்வை, தேசத்தை கட்டியெழுப்பும் வரி மற்றும் வருமான வரி மீதான VAT இற்கு முன்னரான இலாபமானது மைல்கல் பதிவான 1பில்லியன் ரூபாவை முறியடித்து, 33% வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் 1.04 பில்லியன் ரூபா பதிவாகியுள்ளது. வருமான வரியில் 48% அதிகரிப்பை பதிவு செய்த போதிலும், இந்நிறுவனமானது வரிக்கு பின்னரான இலாபத்தில் 701 மில்லியன் ரூபாவை காட்டியுள்ளது.
பங்கொன்றிற்கான வருமானம் ரூ.12.92 ஆகவும், பங்கொன்றிற்கான தேறிய சொத்து பெறுமதி ரூ.79.22 ஆகவும் பதியப்பட்டுள்ளது. Tier I மற்றும் Tier II போன்றவற்றுக்கான கலாசார இணக்கம் மற்றும் போதுமான மூலதன விகிதங்களை சிறப்பாக பேணும் இந் நிறுவனம் கட்டுப்பாட்டு தேவைப்பாடுகளுக்கிணங்க முறையே 5% மற்றும் 10% என பூர்த்தி செய்துள்ளது. தற்போது Tier I 10.14% ஆகவும், Tier II ஆனது 12.92% ஆகவும் காணப்படுகிறது. மேலும் திரவத்தன்மை விகிதமானது தேவையான 10% த்துடன் ஒப்பிடும் போது, மீண்டும் கட்டுப்பாட்டு தேவைக்கு அதிகமாகவே 14.66% ஐ தன்னகத்தே கொண்டுள்ளது.
CDB இன் சொத்து ஆதரவு கடன் புத்தகம் உள்ளடங்கலாக வழக்கமான பண பாய்ச்சல் மற்றும் வருவாய் ஈட்டித்தரும் சொத்துக்கள் ஆகியன ஐந்தொகை சொத்துக்களில் 90% ஐ பிரதிபலித்து அதன் திரவத்தன்மை நிலைமை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த மற்றும் நிகர அடிப்படையில் செயல்படா கடன்கள் (NPL) முறையே 5.78% மற்றும் 3.19% ஆகும். இல 123, ஒரபிபஷா மாவத்தை, கொழும்பு 10 எனும் முகவரியில் தமது கூட்டாண்மை தலைமையகத்தின் அங்குரார்ப்பணத்தை தொடர்ந்து நிதிச் சேவைகள் துறையில் சக்திமிக்க இயக்கியாக தமது பிரசன்னத்தை இந் நிறுவனம் தக்கவைத்துக் கொண்டுள்ளது. நிதித்துறை திரட்டு திட்டத்தின் நெறிமுறைகளுக்கமைய, CDB ஆனது மிகக்குறுகிய காலத்தில் முன்னணி குத்தகை நிறுவனமாக தம்மை நிலைப்படுத்திக் கொண்டதோடு, Laugfs கெப்பிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் 86.26% வீதமான பங்குகளை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதிச்சேவைகள் துறையில் மாத்திரமன்றி, அதன் முற்போக்கான கலாசார இணக்கம் மற்றும் மக்கள் சார்ந்த மூலோபாயங்கள் ஆகியவற்றின் சிறப்புத்தன்மைக்காக இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு தொழில்முறை நிறுவனங்களிடமிருந்து CDB அங்கீகாரம் பெற்றுள்ளது. இந் நிறுவனத்தின் ஆண்டறிக்கையானது the league of American Communication Professionals இனால் நடாத்தப்பட்ட Vision Awards ஆண்டறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் பிளாட்டினம் விருதை வென்றெடுத்ததுடன், உலகளவில் சிறந்த 100 ஆண்டறிக்கைகளுள் 42ஆவது இடத்தையும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த 80 ஆண்டறிக்கைகளுள் 17 ஆவது இடத்தையும் தனதாக்கிக் கொண்டது. இதற்கு மேலதிகமாக இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட CA ஆண்டறிக்கை விருது விழாவில் ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்காக வெள்ளி விருதை வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது. 2014 SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் 2014 HRM விருதுகள் விழாவில் வெள்ளி விருதுகளையும், 12ஆவது SLIM வர்த்தகநாம மேன்மை விருது விழாவில் வருடத்திற்கான சிறந்த சேவை வர்த்தகநாமத்திற்கான வெண்கல விருதையும் CDB வென்றுள்ளது.
CDB ஆனது அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தினூடாக கல்வி மற்றும் IT அறிவு ஊடாக இளைஞர்களை மேம்படுத்தி வருகிறது. புத்தளம் கதயமொட்ட சிங்கள வித்தியாலயத்திற்கு சமகாலத்திற்கேற்ற IT ஆய்வுகூடத்தை அன்பளிப்பாக வழங்கியிருந்ததுடன், சாதரணத் தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய குறைந்த ஆதாயம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 58 மாணவர்களுக்கு CDB சிசுதிரி புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் காப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியன எதிர்கால தலைமுறையினரின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதில் நம்பிக்கை கொண்ட CDB ஆனது அதன் மிஹிகத ஆதரென் திட்டத்தின் கீழ் கனேலிய வனப்பகுதியில் காலி மாவட்டத்தின் 7 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திட்டத்தினை முன்னெடுத்திருந்தது.
கிராமிய பொருளாதாரம், நகர்ப்புற நிதி மற்றும் கிராமிய நிதி வசதிகள் ஆகியவற்றுக்கான தேறிய கடன் வழங்குநராக திகழும் CDB ஆனது கிராமிய பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்கினை ஏற்க வழிவகுத்துள்ளது. இருப்பினும், வைப்பு மற்றும் சேமிப்பு திரட்டு மற்றும் கடனளிப்பு ஆகியவற்றில் அதன் மதிப்பு மற்றும் நிலை தொடர்பில் கவனம் செலுத்தி வரும் முன்னோடியான வங்கிகளுடன் போட்டியிடும் CDB ஆனது தொடர்ந்து அதன் செயல்திறனை நிலைநிறுத்தி வருகின்றது. ஸ்திரத்தன்மை மற்றும் வலிமை ஆகியவற்றுக்கான திடமான அடித்தளத்தை கட்டமைத்துள்ள CDB ஆனது சந்தேகத்திற்கு இடமின்றி தேசிய அபிவிருத்தி நோக்கி செயற்திறன் மிக்க பங்களிப்பை வழங்க தயாராகவுள்ளது.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago