A.P.Mathan / 2015 ஜூலை 09 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மூலிகை பிரத்தியேக பராமரிப்பு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி 'ஆலோக பூஜாவ' நிகழ்வை வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த யாபஹுவ ரஜ மஹா விஹாரையில் பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முன்னெடுத்திருந்தது. இந்த ஒளியூட்டல் நிகழ்வு 'சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய' எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் நான்காவது இராஜதானியாக யாபஹுவ திகழ்ந்திருந்ததுடன், முதலாம் புவனேகபாகு அரசனினால் 13ஆம் நூற்றாண்டில் இந்த இராஜதானி நிறுவப்பட்டிருந்தது. புனித தந்தம் இங்கு 12 வருடங்கள் வைக்கப்பட்டிருந்தது. யாபஹுவ ரஜமஹா விஹாரை கண்டி ராஜதானி காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
சுவதேஷி தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான திருமதி. ஆமரி விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை நிறுவனம் என்ற வகையில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதன் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்' என்றார்.
'எமது பாரம்பரியம் குறித்து எமது எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்துடன் யாத்திரிகர்கள் அனைவரினதும் நலன் கருதி நாம் இந்த ஒளியூட்டலை மேற்கொண்டு வருகிறோம்' என மேலும் குறிப்பிட்டார்.
2013 ஆம் ஆண்டில் வரலாற்று சிறப்பு மிக்க தம்பதெனிய ரஜ மஹா விஹாரையின் தலதா மாளிகையும் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எச்சங்களும் சுவதேஷி நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான அமாரி விஜேவர்தன அவர்களால் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தன.
திருமதி. அமரி விஜேவர்த்தன, 1927ஆம் ஆண்டு களனி விஹாரையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்திருந்த ஹெலெனா விஜேவர்த்தன லமாதெனி அவர்களின் பூட்டப்பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.
களனி ரஜமஹா விஹாரை (விபீஷண தெய்வம்), றுகுணு கதிர்காம ஆலயம் (முருகன்), இரத்தினபுரி சமன் ஆலயம் (சமன் தெய்வம்) மற்றும் தெவுந்தர உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலயம் (விஷ்ணு தெய்வம்) ஆகிய நான்கு தெய்வங்களுக்காக இடம்பெறும் திருவிழாக்களின் போது ஒளியூட்டலை சுவதேஷி மேற்கொண்டு வருகிறது.
1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. நூற்றுக்கு நூறு வீதம் உள்நாட்டு மூலப்பொருட்களை கொண்டு தனது தயாரிப்புகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப்பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், பிளாக் ஈகள் பர்ஃவியும், லேடி மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான 'லிட்டில் ப்ரின்சஸ்' ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய அழகு சவர்க்காரமான ராணி சந்தன சோப் மற்றும் உயர் தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் ஆகியவற்றையும் நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது.
15 minute ago
23 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
50 minute ago
53 minute ago