Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 17 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
Great Places to Work© (GPTW) தொடர்ச்சியான 4ஆவது ஆண்டாகப் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி தெரிவாகியுள்ளது. வளர்ச்சி மற்றும் பிரத்தியேக அபிவிருத்திக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனமாக சினமன் கிரான்ட் ஹோட்டலின் ஓக் அறையில் ஜுலை 8 ஆம் திகதி நடைபெற்ற வைபவத்தின் போது இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளில் திறந்த கலாசாரம், தொழில் சூழல், ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனிப்பு மற்றும் அவர்களின் பிரத்தியேக அபிவிருத்தி மற்றும் வெளிப்படையான செயற்றிறன் நிர்வாகக் கட்டமைப்புகள் போன்றன ஏதுவாக அமைந்திருந்தன. நம்பிக்கை, உறவுகள் மற்றும் நேர்மைத் தன்மை ஆகியன வெற்றியை எய்துவதற்கான முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
இதற்காக முகாமையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கி, முன்மாதிரியானவர்களாக திகழ்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஊழியர்கள் தமது தொழிலை மகிழ்ச்சியுடன் முன்னெடுத்து, வேறுபாடின்றி மதிப்பிட்டு, அதன் மூலமாக ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையானக் கலாசாரத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த செயற்பாடுகளின் மூலமாக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக Great Places to Work© நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
நிறுவனத்தினால் சகல நிலைகளிலும் தொழில்புரிவதற்கு பிரத்தியேகமான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்தப் பயிற்சித் திட்டங்கள் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான அறிவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், Centre of Excellence (COE) அணியினரை டிஜிட்டல், பயிற்சியளித்தல் மற்றும் தீர்வுகள் பற்றிய விளக்கங்களை வழங்க நாம் ஏற்பாடு செய்திருந்தோம்.
இதன் மூலமாக நிறுவனத்தினுள் காணப்படும் திறமைகளை இனங்கண்டு, நிபுணத்துவ தீர்வுகள் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
9 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago