2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

35 மெகாவோட் நீர்மின் உற்பத்தி நிலையமொன்றை நிறுவ இலங்கை திட்டம்

A.P.Mathan   / 2013 ஜூலை 09 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கித்துல்கல, பொல்பிட்டிய பகுதியில் 35 மெகாவோட் நீர்மின் உற்பத்தி நிலையமொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்வலு அமைச்சு அறிவித்துள்ளது.
 
இந்த உற்பத்தி நிலையத்தின் மூலம் வருடமொன்றுக்கு 126 ஜிகாவோட் மின்வலு இலங்கை மின்சார சபைக்காக உற்பத்தி செய்யப்படவுள்ளது. இந்த உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு 82 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 85 வீதத்தை வழங்க சீனாவின் அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. எஞ்சிய தொகையை மக்கள் வங்கி வழங்கவுள்ளது.
 
இந்த மின்உற்பத்தி நிலையத்தையும் சீனாவின் தேசிய இலத்திரனியல் சாதனங்கள் கூட்டுத்தாபனம் நிறுவவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .