Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 டிசெம்பர் 26 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்பார்ப்புகளுக்கு வலுச்சேர்ப்பது எனும் தமது நோக்கத்தின் பிரகாரம் இயங்கும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), தனது 25ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு முன்னெடுக்கும், ஸ்மார்ட் கணனி ஆய்வுகூடங்களை அன்பளிப்புச் செய்யும் செயற்திட்டத்தினூடாக 20 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் கணனி ஆய்வுகூடங்களை வழங்க முன்வந்துள்ளது. நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் பிரதான சமூக நிலைபேறாண்மை திட்டமாக இது அமைந்திருப்பதுடன், இளைஞர்களுக்கு தொழில்நுட்பத்தை அணுகி, அவர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்துவதனூடாக, மதிநுட்பமான மற்றும் நிலைபேறான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
13 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தினூடாக இதுவரையில் களுத்துறை, குருவிட்ட, கெஹேல்பன்னல, மொனராகலை, மதுரங்குளி, கந்தப்பளை, குருநாகல், அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 பாடசாலைகளுக்கு ஆய்வுகூடங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
கிராமிய மட்டத்தில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்துவதற்கான தேவைகளை இனங்கண்டிருந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் மேலும் 20 ஸ்மார்ட் ஆய்வுகூடங்களை நிறுவும் பணிகளை துரிதப்படுத்த CDB தீர்மானித்தது. இந்தத் திட்டத்தினூடாக, இளைஞர்களுக்கு தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றது.
ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கின் 4ஆவது அம்சமான தரமான கல்வி என்பதை மையப்படுத்தி இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், தரமான கல்விக்கு நவீன தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும், தேசத்தின் இளைஞர்கள் மத்தியில் டிஜிட்டல் அறிவை கட்டியெழுப்புவதும் எமது இலக்காக அமைந்துள்ளது.
இந்த ஆய்வுகூடங்களின் முதலாவது தொகுதி, கொலன்னாவ புனிய சூசையப்பர் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த குருவிதென்ன மகா வித்தியாலயம் மற்றும் அட்டபாகே உடுகம மகா வித்தியாலயம் ஆகியவற்றில் நிறுவப்படும். இவை நவம்பர் மாதத்தில் செயற்பட ஆரம்பிக்கும். கல்வி அமைச்சுடன் இணைந்து விசேட திட்டத்தின் அடிப்படையில் தேவைகளைக் கொண்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
CDB இன் பிரத்தியேகமான நிலைபேறான வலுவூட்டல் மற்றும் அறிவை பகிரும் நடவடிக்கைகளினூடாக நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் வாய்ப்புகள் தோற்றுவிக்கப்படுகின்றன. கிராமிய மட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவது மாத்திரமன்றி, மனநிலைகளை வியாபிப்பது, ஜீவனோபாய சாதனங்களை பேணல் மற்றும் தொழில்நிலை வாய்ப்புகளை ஆரம்பிப்பது போன்றவற்றினூடாக இளைஞர்கள் மத்தியில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்.
2 minute ago
6 minute ago
12 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
6 minute ago
12 minute ago
32 minute ago