Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் பல நாடுகள் கொரோனாவைரஸ் (COVID-19) பரவல் காரணமாக எதிர்கொண்டுள்ள ஆபத்தான நிலையை போன்று, இலங்கையிலும் பல சவால்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் துணை நிறுவனங்களில் ஒன்றான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, இந்த நோய் பரவல் தொடர்பில் எழும் சகல நஷ்டஈடு கோரல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பரவும் தொற்றுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகள் தொடர்பில் சாதாரணமாக காப்புறுதி நிறுவனங்கள் காப்பீடுகளை வழங்காத போதிலும், இது போன்றதொரு நெருக்கடியான சூழலில், ஒவ்வொரு நபரினதும் நலன் மற்றும் சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது தனது பொறுப்பாக ஆர்பிகோ இன்சூரன்ஸ் கருதுகின்றது. நிறுவனத்தின் உறுதியான மீள் காப்புறுதி பின்புலத்தினூடாக, இந்த துரித தீர்மானத்தை மேற்கொள்ள முடிந்ததுடன், குழுமத்தின் தலைவர் கலாநிதி. சேன யத்தெஹிகே அவர்களின் தொலைநோக்கமான, அனைத்து இலங்கையர்களுக்கும் இடர் நிறைந்த வேளையில் சேவைகளை வழங்குவது என்பதற்கமைய இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.
2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, இலங்கையின் முன்னணி காப்புறுதி சேவைகள் வழங்குநராக ஒரு தசாப்த காலப்பகுதிக்கும் குறைந்த காலப்பகுதியில் வளர்ச்சியடைந்துள்ளது. தனது தாய் நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் பெறுமதிகள் மற்றும் கொள்கைகளை பின்பற்றி இயங்குவதுடன், ஆயுள் காப்புறுதி தேவைகளை நிவர்த்தி செய்ய நம்பிக்கை வாய்ந்த மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் வழங்குநராக திகழ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago