Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
DIMO Academy for Technical Skills (DATS) கற்கை மய்யத்தின் 27ஆவது பட்டமளிப்பு வைபவம் நிறுவனத்தின் Mercedes Benz மய்யமான DIMO 800 இல் அண்மையில் இடம்பெற்றது.
DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, DIMO குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான கஹநாத் பண்டிதகே, DIMO நிறுவனத்தின் பணிப்பாளர்கள், முகாமைத்துவ அதிகாரிகள், பெற்றோர், DATS பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
DATS கொழும், யாழ்ப்பாணம் ஆகிய கற்கை மய்யங்களிலிருந்து 26 மாணவர்கள் மோட்டார் வாகன எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர்களாக (Automobile Mechatronics Technicians) பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இரு கற்கைமையங்களும் மூன்றாம் நிலை, தொழிற் கல்வி ஆணைக்குழுவால் (Tertiary and Vocational Education Commission - TVEC) அங்கிகரிக்கப்ப
ட்டுள்ளதுடன், Daimler AG இனால் அறிமுகம் செய்யப்பட்ட தற்போதைய காலத்துக்கு உரிய, மாணவர்களை, மய்யமாகக் கொண்ட சுய-கற்றல் எண்ணக்கருவை பின்பற்றுகின்றன.
மோட்டார் வாகன எந்திரவியலில் சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்படுகின்ற ஒரு தகைமையாகப் பிரிவு “A” இன் கீழ், ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தால் DATS க்கு அண்மையில் சான்று அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தில் இத்தொழிற்துறையில் முதன்முதலாக DATS க்கு இது வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே கூறுகையில், “எமது நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் தொழிற்கல்வி பயிற்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. இலங்கை இளைஞர்கள் தொழிற்சந்தையில் போட்டித்திறன் கொண்டவர்களாக மாறுவதற்கு, சரியான திறன்களை விருத்தி செய்து, அவர்களுக்கு வலுவூட்ட வேண்டியது முக்கியமாகும். தொழிற்துறையில் தரமான தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டிய தேவையை DIMO எப்போதும் இனங்கண்டு அங்கிகரித்துள்ளது. இத்தேவையை தீர்த்து வைக்கவே DATS ஸ்தாபிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
7 minute ago
48 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
48 minute ago
55 minute ago