Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
HUTCH Sampath Vish wa மூலமாக தற்போது இணையத்தை உபயோகித்து மீள்நிரப்பல் செய்வதற்கு தனது வாடிக்கையாளர்களுக்கு இடமளித்து, அவர்களுக்கான சௌகரியத்தை மேம்படுத்தியுள்ளது. Hutch வாடிக்கையாளர்கள் ஏற்கனவே கொண்டுள்ள இணையத்தினூடாக மீள்நிரப்பல் செய்யும் வசதிக்கு மேலதிகமாக இது அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பத் வங்கியின் பன்முக வசதிகள் கொண்ட இணைய தளமேடையான Sampath Vishwa> வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் வாழ்க்கைமுறையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒட்டுமொத்தமான இணையத்தள வங்கிச்சேவை அனுபவத்தை வழங்குகின்றது. கணக்கு விபரங்களைப் பெற்றுக்கொள்ளல், பணப்பரிமாற்றம், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள், எவ்விதமான தொலைபேசியினூடாகவும் இணையத்தளத்தினூடாக பணப்பரிமாற்றம் செய்யும் வசதியாக முதன்முதலில் அறிமுகமான Mobile Cash போன்ற பல்வேறு சேவைகள் இதில் அடங்கியுள்ளன.
இப்புதிய வசதியின் அறிமுகம் தொடர்பில் HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா கருத்துத் தெரிவிக்கையில், 'பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் வழிமுறைகளை HUTCH தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளது. இணையத்தளத்தினூடாக கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடன்ஃடெபிட் அட்டைகளை உபயோகிப்பதில் அனைவரும் சௌகரியத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். ஆகவே இப்புதிய முயற்சியின் மூலமாக சம்பத் வங்கியில் கணக்கினை வைத்திருக்கின்ற HUTCH வாடிக்கையாளர்கள், Sampath Vishwa வசதியினூடாக தமது மொபைல் கணக்கிற்கு இணையத்தின் மூலமாக மீள்நிரப்பல் செய்யவோ அல்லது அதற்கான கொடுப்பனவை மேற்கொள்ளவோ வாய்ப்புக் கிடைத்துள்ளது'.
இப்புத்தாக்க முன்னெடுப்பின் அறிமுகம் தொடர்பில் சம்பத் வங்கியின் புதிய தகவல் தொழில்நுட்ப வியாபார மேம்பாட்டிற்கான உதவிப் பொது முகாமையாளரான ராஜேந்திர ரணசிங்க குறிப்பிடுகையில், 'பரந்துபட்ட சேவைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களுடன் தொழிற்துறை டிஜிட்டல் மயமாகி வருகின்ற இக்காலகட்டத்தில் நாட்டிலுள்ள முன்னணி கைத்தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்கல் நிறுவனங்களுள் ஒன்றுக்கு Sampath Vishwa சேவைகளை வழங்குவதையிட்டு சம்பத் வங்கி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
ஒருவர் தனது மொபைல் தொலைபேசிக்கு மீள்நிரப்பல் செய்தல் போன்ற மிகவும் அடிப்படையான அன்றாடத் தேவைகளை மேற்கொள்ளும் சௌகரியத்தை வழங்குகின்ற HUTCH உடனான இப்பங்குடமை, சம்பத் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகுந்த சௌகரியத்தையும், புத்தாக்கமான தீர்வுகளையும் வழங்கவேண்டும் என்ற எமது இலக்குகளை எதிரொலிக்கச் செய்யும் வகையில் வங்கியின் சேவைகளை நீட்டிக்க இடமளித்துள்ளது' என்றார்.
29 minute ago
38 minute ago
42 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
42 minute ago
46 minute ago