Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மே 12 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர ஒதுக்கீட்டை அணுகுவதற்கு நள்ளிரவு வரை இனி காத்திருக்கவோ, பகல் நேரத்தில் பயன்படுத்த ஒதுக்கீடுகள் தீர்ந்து விடும் என்று கவலைப்படவோ தேவையில்லை.
அனைத்து Hutch 078 & 072 சந்தாதாரர்களும் *131# ஐ டயல் செய்து இந்த பக்கேஜ்களை செயற்படுத்திக்கொள்ள முடியுமென்பதுடன், இது 3G மற்றும் 4G ஆகிய இரு பாவனையாளர்களுக்கும் கிடைக்கின்றது.
இந்த முயற்சியானது வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதற்கான Hutch இன் தொடர்ச்சியான முயற்சிகளையும், சிறந்த பெறுமதியான தயாரிப்புகளை வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பையும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. இந்த முயற்சியானது மொபைல் சந்தாதாரர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) துரிதமாக அங்கீகரிக்கப்பட்டது.
COVID – 19 இனால் நாடு சவால்களை எதிர்கொண்டுள்ள இந் நேரத்தில், இந்த முயற்சியானது நிவாரணத்தின் மற்றொரு வரவேற்கத்தக்க படியாக அமைந்துள்ளது. இந்த Anytime டேட்டா பக்கேஜ்கள், பாவனையாளர்கள் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான தகவல்களை பெற்றிருக்கவும், அவர்களின் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்கவும், தேவைப்படும் போது அவர்களின் இரவு ஒதுக்கீட்டை பற்றி கவலைப்படாமல் வீட்டிலிருந்து அவர்களின் பணி நடவடிக்கைகளைத் தொடரவும் உதவுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .