Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் இணையதளத்தின் ஊடான வர்த்தக நடவடிக்கைகள் துறையில் (E-commerce) முன்னோடி நிறுவனமான கப்றுக நிறுவனம் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக முக்கியமான ஒத்துழைப்பை வழங்கும் முகமாக IDH மருத்துவமனையில் கடமையாற்றும் 600க்கும் அதிகமான ஊழியர்களுக்காக புதுவருடத்தின் போது அவர்களது வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை எடுத்தது.
கொவிட்-19 வைரஸூடன் நேரடியாக போராடி வரும் மருத்துவமனை ஊழியர்கள் செய்யும் தேசிய பொறுப்புணர்வை வரவேற்கும் முகமாக இந்த அன்பளிப்பை அவர்களது வீடுகளுக்குச் சென்று ஒப்படைப்பதற்கு கப்றுக நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்துக்காக கப்றுக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துலித் ஹேரத், பிரதான விற்பனை அதிகாரி லலித் சீ பெரேரா, நடவடிக்கைகள் பணிப்பாளர் அலெக்ஸாண்டர் சிவகுமார் மற்றும் விற்பனை முகாமையாளர் சுரேஷ் எரந்த ஆகியோர் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் IDH மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க, பிரதி பணிப்பாளர் டொக்டர் சின்த வீரசூரிய மற்றும் உடலியல் நோய் நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த சவால் நிறைந்த நிலைமையில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தமது துறையில் பெற்றுக் கொடுக்கக் கூடிய உச்ச அளவு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பது மற்றும் கொவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியிலுள்ள குழுவினருக்காக தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு கப்றுக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
18 minute ago
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
27 minute ago
3 hours ago