2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

IDH வைத்தியசாலைக்கு அன்பளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

Covid-19 கொள்ளை நோய் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹேலிஸ் குழுமத்தின் இணை நிறுவனங்களான Haycarb, DPL மற்றும் Eco Solutions ஆகியன இணைந்து 10.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான அவசர தேவைக்கான ஒரு தொகை வைத்திய உபகரங்கள் மற்றும் தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களை, விஸ்தரிக்கப்பட்டுள்ள IDH மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அன்பளிப்பு செய்துள்ளது.

இவ்வாறான உலகளாவிய மற்றும் தேசிய நெருக்கடி நிலையின் போது இலங்கை அரசுடன் முப்படையினர், பொலிஸார், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மருத்துவ தொழிலாளர்கள் மட்டுமன்றி அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அனைத்து திணைக்களங்களும் மிகவும் பாரிய அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதம் குறித்து ஹேலிஸ் குழுமம் விசேடமாக கருதுவதுடன், நிறுவனத்தின் இந்த முன்முயற்சியானது மிகவும் சிறிய விடயமாகவே கருதுகிறது.

மேலும், நூற்றாண்டில் ஏற்பட்ட மிகவும் மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கையை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு சிலர் தங்களது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் நடவடிக்கை மேற்கொள்ளுகின்றனர்.

ஹேலிஸ் குழுமத்தின் இந்த இணை நிறுவனங்கள் மூன்றின் ஊடாக சேர்க்கப்பட்ட நிதியை பயன்படுத்தி பல்வேறு அளவிலான நோயாளர் பராமரிப்பு கட்டமைப்புக்கள் 6ஐயும் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளுக்கான சிறினஜர் குழாய்கள் 10ஐயும் IDH மருத்துவமனைக்கு பெற்றுக் கொடுத்ததுடன் மிகுதியான நிதியை எதிர்வரும் வாரங்கள் முழுவதும் COvid-19க்கு எதிரான போராட்டத்துக்குது் தேவையான ஏனைய முக்கியமான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நிறுவனங்களிலுமுள்ள ஊழியர்கள் தன்னார்வத்துடன் 5.3 மில்லியன் ரூபாவை வழங்கி இந்த வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன் ஒவ்வொரு நிறுவனமும் இந்த நன்கொடைகளை 1:1 அடிப்படையில் செய்தமை விசேட அம்சமாகும்.

‘Covid-19 தொற்றுவதை தவிர்ப்பதற்கு அனைத்து இலங்கையர்களுக்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதுடன் தைரியத்துடன் இருந்து நடவடிக்கைகளை செய்துவரும் சுகாதார சேவை ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் முக்கியமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு எமது குழுவினர் பெறுமையடைகின்றனர். இந்த தீர்மானம் மிக்க காலப்பகுதியில் சுகாதார மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு பொறுமையுடன், ஞானமாக மற்றும் கீழ்ப்படிவுடன் செயற்படுமாறு நாம் இலங்கையிலுள்ள அனைவரிடமும் கண்டிப்பாக கேட்டுக் கொள்கிறோம்.' என ஹேலிஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே தெரிவித்துள்ளார்.

1878ஆம் ஆண்டு வாஸ் பீ. ஹேலிஸினால் காலி நகரத்தை மையமாகக் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஹேலிஸ் நிறுவனம் சிறப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் 140 வருடத்துக்கு மேலான சேவையை வழங்கி வருவதோடு, ஹேலீஸ் குழுமம் நிலையான புத்தாக்கத்துடன் உலகை சிறப்பாக எதிர்கொண்டு உலகின் 5 வலயங்களில் 16 பிரிவுகளில் தடம்பதித்துள்ள பல்நோக்கு நிறுவனமாகும். நிகழ்காலத்தில் இலங்கை வியாபார துறையில் முன்னணி இடத்தை பெற்றுள்ள நிறுவனம் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக பெற்ற முதலாவது நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 3.3மூ பங்களிப்பை ஹேலீஸ் நிறுவனமே வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X