Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 29 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கை ஒருங்கிணைக்கப்பட்ட பொறியியலாளர் நிறுவனத்துடன் (IIESL) மூலோபாய பங்காண்மை ஒன்றில் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தது.
இதனூடாக, புத்தாக்கமான, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய பரந்தளவு காப்புறுதித் தீர்வுகளை இலங்கை ஒருங்கிணைக்கப்பட்ட பொறியியலாளர் நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தொழில்நுட்பத்துறையில் சகல மட்டங்களையும் சேர்ந்த நபர்களைத் தன்னகத்தே அங்கத்தவர்களாகக் கொண்ட முன்னணி அமைப்பாக இலங்கை ஒருங்கிணைக்கப்பட்ட பொறியியலாளர் நிறுவனத்துடன் (IIESL) திகழ்வதுடன், அவர்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மதிப்பை ஏற்படுத்துகிறது.
தொழில்நுட்பத்துறையில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறியியலாளர்களாக ஒருங்கிணைக்கப்பட்ட பொறியியலாளர்கள் திகழ்கின்றனர். இவர்கள் நிர்மாணம், செயற்பாடுகள், பராமரிப்பு, செயற்றிட்ட முகாமைத்துவ நடவடிக்கைகள் போன்றவற்றை நிர்வகிக்கும் செயற்பாடுகளை பொருத்தமான தொழில்நுட்பப் பிரயோகத்துடன் மேற்கொள்கின்றனர்.
இலங்கையின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிபுணத்துவ அமைப்புகளுடன் நிறுவனம் பங்காண்மைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆயுள் காப்புறுதியினூடாக தமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முக்கியத்துவத்தை இந்த நபர்களுக்கு வழிகாட்டி வலியுறுத்துகிறது.
நாட்டின் அபிவிருத்திக்காக வெவ்வேறு பிரிவுகளில் தமது பங்களிப்பை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் திறமை வாய்ந்த நபர்களின் ஆயுளை பாதுகாப்பதற்காக IIESL உடன் ஆயுள் காப்புறுதி பங்காளராக கைகோர்த்துள்ளதையிட்டு யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமை கொள்கிறது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago