Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டுச் சந்தையில், சுவர் மற்றும் தரை டைல்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், அதனை ஈடுசெய்யும் வகையில், LANKATILES இந்திய டைல் உற்பத்தி நிறுவனமான Ambani Vitrified (Pvt.) Ltd உடன் வெற்றிகரமான கூட்டிணைவினை அண்மையில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றிகரமான கூட்டிணைவின் மூலமாக சந்தையில் பெருகி வருகின்ற கேள்வியை ஈடுசெய்யும் வகையில் 24’ x 24’ அளவிலான டைல்களின் பாரிய தொகையை சந்தையில் வெளிவிடும் எதிர்பார்ப்புடன் மிகப் பாரிய உற்பத்திக் கோரல் ஒன்றை LANKATILES முன்வைத்துள்ளது. இலங்கை தர கட்டளைகள் நிறுவனத்தால் விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு அமைவாக இந்த டைல்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், SLS தர சான்றிதழையும் கொண்டிருக்கும்.
இது தொடர்பில் Lanka Walltiles PLC மற்றும் Lanka Tiles PLC ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளரான மகேந்திர ஜெயசேகர அவர்கள் கருத்து வெளியிடுகையில், “LANKATILES மீது மாபெரும் நம்பிக்கையைப் பேணி வருகின்ற எமது வாடிக்கையாளர்களை நாம் அதிருப்திப்படுத்த விரும்பவில்லை. ஆகவே, தொடர்ந்தும் அதிகரித்துவருகின்ற கேள்வியை ஈடுசெய்யும் வகையில், இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த டைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Ambani Vitrified (Pvt.) Ltd நிறுவனத்துடன் கூட்டிணைவினை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்தோம். இந்த டைல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், LANKATILES என்ற எமது வர்த்தகநாமத்தின் கீழ் விற்பனை செய்யப்படும்,” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தனது கருத்தை வெளியிட்ட மகேந்திர ஜெயசேகர அவர்கள், “எமது கடுமையான வழிகாட்டல்கள், குறியீட்டு அம்சங்கள் மற்றும் தர நடைமுறைகளுக்கு அமைவாக டைல்கள் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் முகமாக, எமது ஊழியர்கள் சிலர் குஜராத்திலுள்ள உற்பத்தி ஆலையில் தங்கியிருந்து செயற்படவுள்ளனர்” என்றார்.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago