2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் Northshore Campus ஒப்பந்தம்

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராஜ்ஜியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் (LJMU) முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மை ஒப்பந்தத்தில் Northshore Campus கம்பஸ் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பங்காண்மை ஒப்பந்தத்தினூடாக இரு கல்விசார் நிறுவனங்களும் இணைந்து கற்பித்தல் தேவைகளை கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கும், குறிப்பாக குறிப்பாக ஆய்வு பத்திரங்கள், வெளியீடுகள் மற்றும் தகவல்களுடன் கூடிய ஒன்றிணைந்த கற்கைநெறிகளை விருத்தி செய்தல் மற்றும் செயற்படுத்தல்களுக்கு வாய்ப்பாக அமையும். இதற்கு மேலதிகமாக இரு நிறுவனங்களினும் மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் தமக்கிடையில் பரஸ்பர ஈடுபாடு புரிதலுடன் கூடிய பொது பாடவிதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வாழ் மாணவர்களுடைய உயர் கல்விசார் நடவடிக்கைகளில் இப்பங்காண்மை ஒப்பந்தம் மிகப்பெரும் பங்காற்றுவது மட்டுமன்றி, இதன் பிரகாரம் மாணவர்கள் தமது அடிப்படை பட்டமுன்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கைகளுக்கான தகைமைகளை LJMU உடன் இணைந்து இலங்கையில் இருந்தவாறே பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X