Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜனவரி 12 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோழி இறைச்சி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள New Anthoney’s Farms, சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெருமைக்குரிய சான்றிதழான FSSC 22000 ஐப் பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது கோழி இறைச்சி உற்பத்தியாளராகத் திகழ்கின்றது.
இந்த தரச் சான்றிதழைப் பெற்றுள்ளதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் காணப்படும் பாதுகாப்பான கோழி இறைச்சியை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நியமத்தை மேம்படுத்தி, நியமத்துக்கு அப்பால் செல்லும் வகையில் New Anthoney’s Farms அமைந்துள்ளது.
FSSC 22000 சான்றிதழை பெற்றுக் கொண்டதனூடாக, புதிய தொழிற்துறை நியமத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கோழி இறைச்சித் துறையில் தரம், பாதுகாப்பு மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றில் உயர் நியமத்தை உறுதி செய்துள்ளது. அத்துடன் இதர கோழி இறைச்சி உற்பத்தியாளர்களையும் தம்மைப் பின்தொடர்ந்து விநியோகத் தொடரில் தரத்தை மேம்படுத்தவும், நம்பிக்கையை கட்டியெழுப்பவும் அழைக்கின்றது.
New Anthoney’s Farms (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர அணியினருக்கும், பங்காளர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த செயன்முறைக்கு ஆதரவளித்தமைக்காக நன்றியை தெரிவித்திருந்தார். சந்தையில் உயர் நியமத்திலமைந்த கோழி இறைச்சி தயாரிப்புகளை தொடர்ந்தும் வகையில் புதிய நியமத்தை ஏற்படுத்த அவர் எதிர்பார்க்கின்றார். இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்வதில் SGS லங்கா முக்கிய பங்காற்றியிருந்தது.
தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உயர் நியமங்களை பின்பற்றுகின்றமையினால், Anthoney’s தயாரிப்புத் தெரிவுகள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் தற்போது மேலும் நம்பிக்கை கொள்ள முடியும். FSSC 22000 சான்றிதழ் என்பதனூடாக, உள்நாட்டில் வர்த்தக நாமம் மேம்படுத்தப்படுவது மாத்திரமன்றி, ஏற்றுமதி அதிகரிப்பை வழங்கி, சர்வதேச சந்தைகளுக்கு New Anthoney’s Farms சென்றடைவை விரிவாக்கம் செய்வதிலும் பங்களிப்பு வழங்குகின்றது.
ஒழுக்கமான மற்றும் நிலைபேறான செயன்முறைகளை பின்பற்றுவதில் New Anthoney’s Group முன்னிலையில் திகழ்கின்றது. கடந்த ஆண்டில், பெருமைக்குரிய ‘Sustainable U.S. Soy’ இலச்சினையை தமது பொதிகளில் பதிவதற்கான அங்கிகாரத்தைப் பெற்றிருந்தது. அதனூடாக நிலைபேறான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், தெற்காசிய மற்றும் உப-சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தின் முதலாவது நிறுவனமாகவும் திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் பின்தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Aug 2025