Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ReeBonn கொஸ்மெட்டிக்ஸ் இலங்கையின்; முன்னணி ஹெர்பல் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். ReeBonn கொஸ்மெட்டிக்ஸ் தனது தயாரிப்பான tea tree oli shampoo மற்றும் conditioner சந்தையில் மீள்அறிமுகம் செய்துள்ளது. அவுஸ்திரேலிய தாவரமான டிட்-ரீ மரத்திலிருந்து பெறப்பட்ட எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷெம்பு மற்றும் கண்டிஷனர் வகைகள் இவ்வாறு சந்தையில் மீள் அறிமுகம் செய்யப்பட்டு;ள்ளன. உலகப்புகழ் பெற்ற மருந்துப் பொருட்களில் ஒன்றான டிட்-ரீ மரச் சேர்மானத்துடன் க்ளிம்பசோல் கொண்டும் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. பொடுகு பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை வழங்கும் தயாரிப்புகளாக டிட்-ரீ எண்ணெய் ஷெம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியன அமைந்துள்ளன.
தெற்கு அவுஸ்திரேலியாவில் பயிர்செய்யப்படும் டிட்-ரீ ReeBonn மருந்துச் செடிகளிலிருந்து பெறப்படும் சேர்மானத்தைக் கொண்டு, ReeBonn நிறுவனம் பொடுகை கட்டுப்படுத்தும் ஷெம்பு மற்றும் கண்டிஷனர் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.
டிட்-ரீ எண்ணெய் என்பது, தலையின் தோற்பகுதியில் ஏற்படும் பங்கஸ் மற்றும் பக்றீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்;தி பொடுகுத் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது அத்துடன் இச் சிறப்பு ஃபோர்மியுலா கூந்தல் வேர் பகுதியில் ஈரலிப்பை பேண உதவுகிறது. இதன் மூலமாக, சிகையில் அதிகளவு காற்றோட்டம் காணப்பட வழிவகுக்கப்படுவதுடன், கூந்தலுக்கு தொடர்ச்சியாக பசுமையும் சேர்க்கப்படுகிறது.
ReeBonn கொஸ்மெடிக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. எஸ்.சிவராஜா இந்த மேம்படுத்தப்பட்ட டிட்ரீ எண்ணெய் ஷம்பு மற்றும் கண்டிஷனர் மீள் அறிமுக நிகழ்வின் போது, பொடுகை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதன் காரணமாக, உலகப் புகழ்பெற்ற ஷெம்பு மற்றும் கண்டிஷனர் வர்த்தக நாமங்களை உற்பத்தி செய்வதற்கு டிட்-ரீ எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
'இலங்கையின் நுகர்வோரின் அனுகூலத்தை கவனத்தில் கொண்டு டிட்-ரீ எண்ணெயைக் கொண்டு ஷெம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ReeBonn நிறுவனம் தற்போது தமது பாவனையாளர்களுக்கு பொடுகை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான கூந்தலை பெறுவதற்கு தீர்வொன்றை வழங்கியுள்ளது.
எமது ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திகள் மூலமாக, மிகவும் சிறப்பு வாய்ந்த ஆயர்வேத மூலிகைகளை பொடுகை கட்டுப்படுத்தும் இந்த தயாரிப்பை உற்பத்தி செய்வதற்கான பிரதான மூலப்பொருட்களாக பயன்படுத்த பட்டுள்ளது பிரதான விடயமாக டிட்-ரீ எண்ணெய் ஷெம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றின் ph பெறுமதியை குறிப்பிட முடியும். இவற்றில் ph பெறுமதி 5.5 மற்றும் 6.5 ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக அமைந்துள்ளது. இது சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிகவும் சிறந்த பெறுமதியாகும்.' என்றார்.
2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ReeBonn கொஸ்மெடிக்ஸ் பிரைவட் லிமிடெட், பரந்தளவு மூலிகை அழகுசாதன தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. இவற்றுக்கு சிறந்த கேள்வியும் சந்தையில் காணப்படுகிறது. இந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில், shampoo, silicon conditioner, rinse off conditioner, black henna, face wash, fairness cream, Herbal creamy Beuty soap, Hair oil மற்றும் hand wash liquids போன்றன அடங்கியுள்ளன. ReeBonn கொஸ்மெடிக்ஸ் தயாரிப்புகள் ஜப்பான், இந்தியா, தெற்காசியா மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்படுத்தி செய்யப்படுகின்றன.
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago